NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் பெறுவதற்கான ஆசிரியர்களின் ஆலோசனைகள்

கவனக்குறைவை தவிர்த்தால், நூறு மதிப்பெண்கள் பெறுவது எளிதானது என தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தந்த ஆலோசனை:

* ஆங்கிலம்: கே.முருகவேல்(அரசு உயர்நிலைப்பள்ளி, டி.கள்ளிப்பட்டி): கட்டுரை வினா, மனப்பாடப்பகுதி பாடலுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். பஞ்சுவேசன், காம்பிரிகன்சன் பகுதியில் எளிதில் மதிப்பெண் பெற முடியும். கவனத்துடன் முயன்றால் ஆங்கிலம் முதல் தாளில் 99.5 மதிப்பெண் பெறலாம். 2ம் தாளில் சப்ளிமென்டரி மட்டும் படித்தாலே 35 மதிப்பெண் பெறலாம். கடிதம் எழுதுதல், விளம்பரம் தயாரித்தல் போன்ற கேள்விகளுக்கு படிக்காமலேயே, புரிந்து கொண்டால் எளிதில் மதிப்பெண் எடுத்து விடலாம்.
* கணிதம்: பி.தேன்மொழி(பி.சி.,கான்வென்ட், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி): கணிதத்தில் சூத்திரங்கள், தேற்றங்களை நன்கு படித்து எழுதிப்பார்க்க வேண்டும். இயற்கணிதம், காரணிப்படுத்துதல், வர்க்கமூலம் காணுதல், மெய்யெண்கள் தொடர் மற்றும் தொடர் வரிசை பகுதியில்அதிக கவனம் செலுத்தினால், 70 மதிப்பெண்கள் வரை பெற முடியும். கணிதத்தில் நேரம் முக்கியம்.கணிதத்தில் சுய முயற்சியுடன், கவனக்குறைவை தவிர்த்தால் நூறு மதிப்பெண் எளிதில் பெறலாம்.
* அறிவியல்: ஆர்.அசாரியாராஜாமணி(என்.எஸ்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி): புத்தகத்தின் பின்புறம் உள்ளவற்றில் இருந்து அதிகப்படியான ஒரு மதிப்பெண் வினாக்கள் வரும். குறிப்பாக 1, 6, 15, 1617 பாடங்களில் 25 ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படுகின்றன. வேறுபாடுகள், பயன்கள், பண்புகள் இவற்றை மையமாகக்கொண்டு அதிக வினாக்கள் கேட்கப்படும். நியூட்டன் விதிகள், பயன்பாடுகள், தடுப்பூசி போடுதல், அட்டவணை கேள்விகள், விதை முளைத்தல், மூளை தொடர்பான கேள்விகள் அடிக்கடி கேட்கப்படும்.
* சமூக அறிவியல்: வி.ராஜாராம்(இந்து மேல்நிலைப்பள்ளி, சக்கம்பட்டி): பொருத்துக பகுதி எளிமைப்படுத்தப்பட்டுள்ளதால், 10 மதிப்பெண் எளிதில் பெறலாம். வரலாறு, புவியியல், குடிமையியல் பகுதியின் ஒவ்வொரு பாடத்தின் பின்புறம் உள்ள கேள்விகளை கண்டிப்பாக படிக்க வேண்டும். வரைபடத்தில் ஆசியா, இந்தியா பகுதிகள் அடிக்கடி கேட்கப்படுகிறது. இவற்றை குறித்து பழக வேண்டும். கட்டுரை வினாக்களில் காடுகளின் அவசியம், இயற்கை வளம், அவற்றின் பாதுகாப்பின் அவசியம்மழைநீர் சேகரிப்பு போன்றவை முக்கியம். காலக்கோடு பகுதிக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
மதியம் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தந்த ஆலோசனைகள்
* ஆங்கிலம்: எஸ்.உத்தண்டலட்சுமி(அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி, எ.புதுப்பட்டி): புத்தகத்தில் உள்ள பயிற்சி வினாக்களில், நன்கு பயிற்சி பெற வேண்டும். கட்டுரை, பத்தி வினாக்களை திரும்ப திரும்ப எழுதிப்பார்க்க வேண்டும். இ.ஆர்.சி.,காம்பிரியன்சன் வினாக்களுக்கு முந்தைய ஆண்டில் உள்ள வினாக்களில் நன்கு பயிற்சி பெற வேண்டும். பொருள், எதிர்ச்சொல் எழுதுதல் பகுதிகளில் எளிதாக முழு மதிப்பெண் பெற "குளோசரி" பகுதியில் நன்கு பயிற்சிசெய்து படிக்க வேண்டும். இலக்கணம் தொடர்பான கேள்விகள் புத்தகத்தில் உள்ள வினாக்களின் அடிப்படையில் அதிகம் கேட்கப்படும்.
* கணிதம்: கே.ஆர். ராம்சுந்தர்(ஜ.கா.நி.,மேல்நிலைப்பள்ளி, போடி): புத்தகத்தில் உள்ள 271 வினாக்களில் இருந்து 30 ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படும். முதல் தொகுதியை முழுமையாக படித்தால் 120 மதிப்பெண் பெறலாம். இரண்டாம் தொகுதியில் இருந்து 6, 7, 9, 10பாடப்பகுதிகளை படித்தால் மீதமுள்ள வினாக்களை கட்டாயம் எழுத முடியும். விடைகளுக்கு தேவையான இடங்களில் வரைபடம் இருந்தால் கட்டாயம் வரைய வேண்டும்.
* இயற்பியல்: எம்.மகேஷ் (அரசு  மேல்நிலைப்பள்ளி, அல்லிநகரம்): பத்து மதிப்பெண் வினாக்களுக்கு 1, 4, 5, 6, 8 பாடங்களில் உள்ள வினாக்களை படிக்க வேண்டும். ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு 1, 2, 4, 5, 7, 8 பாடங்களில் உள்ள வினாக்களை படிக்க வேண்டும். மூன்று மதிப்பெண் வினாக்களுக்கு 1, 2, 4, 5, 6, 7, 8, 9 ஆகிய பாடங்களில் உள்ள வினாக்களை படிக்கவும். புத்தகத்தில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்களுக்கான விடைகளை பாடப்பகுதியில் படிக்க வேண்டும்.
* வேதியியல்: எம்.ஜெயசேகரன்(என்.எஸ்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி): ஈதர்கள், உயிர் வேதியியல், நடைமுறை வேதியியல் பகுதியில் மட்டும் 22 மதிப்பெண் பெற லாம். சமன்பாடுகளை திரும்ப திரும்ப எழுதிப்பார்க்க வேண்டும். ஒரு மதிப்பெண் வினாக்களில் அதிக கவனம் செலுத்தாவிட்டால், மொத்த மதிப்பெண் குறைந்து விடும். ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு விடைகளை பாய்ன்ட், பாய்ன்ட் ஆக எழுதினால் முழு மதிப்பெண் பெற முடியும்.
* உயிரியல்: என்.எஸ். ராஜா, என்.எஸ்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி: பாஸ் செய்வதற்கு முதல் பாடத்தை நன்றாக படித்தால் போதும். தேவையான இடத்தில் படம் வரைய வேண்டும். பாடம் 2ல் உள்ள படங்கள்,பாடம் 5ல் உள்ளவற்றை மட்டும் படித்தால் போதும்.100 மதிப்பெண் பெற புத்தகம் முழுமையும் படித்தாக வேண்டும். பயன்பாடு, முக்கியத்துவம், சோதனை குறித்த வினாக்களை கண்டிப்பாக படிக்க வேண்டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive