NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேசிய திறன் மேம்பாட்டுக் கவுன்சிலின் பணிகள்


           6 முதல் 16 வயது வரையான 30 கோடி குழந்தைகளில், 10% பேர் மட்டுமே பள்ளிக் கல்வியில் தேர்ச்சி பெறுகிறார்கள். ஆண்டுதோறும், முதல்முறையாக பணியில் சேரும் 130 லட்சம் பேரில், 45% பேர் கல்வியறிவு இல்லாதவர்கள். 25% பேர் தொடக்கக் கல்வி மட்டுமே பெற்றவர்கள்.


         மொத்த பணியாளர்களில், 10%க்கும் குறைவானவர்கள் மட்டுமே, முறைசார் நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள். அதேசமயம், முறைசாரா நிறுவனங்களில் பணியாற்றும் நபர்கள், குறைந்த சம்பளம், பணிப் பாதுகாப்பின்மை, அதிகமான பணிச்சுமை, அதிக பணிநேரம் உள்ளிட்ட பல விஷயங்களில் பாதிக்கப்படுகிறார்கள்.

         தற்போது, நாட்டிலுள்ள திறன் மேம்பாட்டு பயிற்சிகளின் ஆள் கொள்ளளவு 45 லட்சத்திற்கும் குறைவே. வரும் 2022ம் ஆண்டு, 21 முக்கியத் துறைகளில், திறன்வாய்ந்த நிபுணர்களுக்கான பற்றாக்குறை 2440 லட்சங்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இருக்கும் வேலைவாய்ப்புகளுக்கும், நிபுணர்களின் தேவைக்கும் இருக்கும் பொருத்தமற்ற நிலையின் காரணமாக, அதிகபட்ச வேலையில்லா விகிதம், திறன் பற்றாக்குறையுடன் ஒத்திருக்கிறது.

           திறன் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதே, இன்றைய நிலையில் இந்திய அரசாங்கத்தின் முக்கிய ஆவலாக உள்ளது. நாடு எதிர்நோக்கியிருக்கும் சவால்களில் முதன்மையானது, கல்வி - வேலைவாய்ப்புத் திறன் - பணிகள் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்புகளை வலுவாக்குவதே ஆகும். பிரதமரைத் தலைவராகக் கொண்டு, கடந்த 2008ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சில், அந்த சவாலை சமாளிக்கும் நடவடிக்கையின் முதற்படியாகும். இந்தக் கவுன்சிலின் செயல்பாட்டுப் பிரிவாக, 2009ம் ஆண்டு, தேசிய திறன் மேம்பாட்டுக் கார்பரேஷன் அமைக்கப்பட்டது. 2010ம் ஆண்டு, திறன் மேம்பாடு தொடர்பான பிரதமரின் ஆலோசகராக, ராமடோரை என்பவர் நியமிக்கப்பட்டார்.

தனியார் - பொது ஒத்துழைப்பு
          தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சில் என்பது, அந்த வகையில், தனியார் - அரசு ஒத்துழைப்பில் ஏற்பட்ட முதல் அமைப்பாகும். வரும் 2022ம் ஆண்டு முடிவில், 15 கோடி மக்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சியளிப்பது இதன் நோக்கம். தனியாருடன் இணைந்து, நாடெங்கிலுமுள்ள தனியார் திறன் வளர்ப்பு மையங்களுக்கு, இக்கவுன்சில் உதவிபுரிகிறது.

        ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக் ஹார்டுவேர், டெக்ஸ்டைல் மற்றும் கார்மென்ட்ஸ், லெதர் அன்ட் லெதர் குட்ஸ், ஜெம்ஸ் மற்றும் ஜுவல்லரி, பிபிஓ, டூரிஸம், ஹெல்த்கேர் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் போன்ற முக்கியத் துறைகளுக்கு 24 முதல் 25 கோடிகள் வரையான திறன்மிகு நபர்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive