26/05/2013

ஜப்பானில் உதவித்தொகையுடன் படிப்பு


              ஜப்பானில் உள்ள கல்வி, கலாச்சாரம், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், ஜப்பானில் உள்ள சிறப்பு பயிற்சி கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, பல்கலைகள் (இளநிலை படிப்பு) போன்றவற்றில் சேர விரும்பும், சர்வதேச மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
 
 
          இக்கல்வி உதவித் தொகை ஏப். 2014 முதல் மூன்று, நான்கு, ஐந்தாண்டு படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. 

என்ன படிப்புகள்?
* சிறப்பு பயிற்சி கல்லூரி (3 ஆண்டுகள்)
1. சுய கவனிப்பு மற்றும் உணவூட்டவியல்
2. கல்வி மற்றும் நலத்துறை
3. வியாபாரம்
4. ஆடை வடிவமைத்தல் மற்றும் குடும்ப பொருளதாரம்
5. கலாசாரம் மற்றும் பொதுக் கல்வி

* தொழில்நுட்ப கல்லூரிகள் (4 ஆண்டுகள்)
மெக்கானிக்கல் இன்ஜி., எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக், இன்பர்மேஷன்
கம்யூனிக்கேஷன், நெட்வொர்க், மெட்டீரியல், ஆர்க்கிடெக்சர் அண்டு சிவில், மரிடைம் இன்ஜி.,

* பல்கலைகள் (இளநிலை படிப்பு 5 ஆண்டுகள்)
1. சமூக அறிவியல் மற்றும் மானுடவியல்
 (சட்டம், அரசியல், சமூகவியல், இலக்கியம், வரலாறு, ஜப்பான் மொழி, பொருளாதாரம் மற்றும் வியாபார நிர்வாகம்)
2. இயற்கை அறிவியல்
(எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் ஸ்டடீஸ், மெக்கானிக்கல் ஸ்டடீஸ், சிவில் இன்ஜி., அண்டு ஆர்க்கிடெக்சர், கெமிக்கல் ஸ்டடீஸ்)
3. இயற்கை அறிவியல் (வேளாண்மை படிப்பு, சுகாரம்)
4. இயற்கை அறிவியல் (மருத்துவம், பல் மருத்துவம்)

தகுதிகள்
விண்ணப்பதாரர் 02.04.1992லிருந்து 01.07.1997க்குள் பிறந்திருக்க வேண்டும். பிளஸ் 2 தேர்ச்சி அல்லது உயர்நிலை படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு
சென்னையில் உள்ள ஜப்பான் தூதரக வளாகத்தில் நடைபெற இருக்கும் எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் பின்னர் தெரிவிக்கப்படும். 

தேர்வு எழுத ஜப்பானிய மொழி தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.
தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல், ஜப்பானில் உள்ள கல்வி, கலாச்சாரம், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு, இறுதித் தேர்வு நடைபெறும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பிப்., 2014க்குள் தகவல் தெரிவிக்கப்படும். 

விண்ணப்பப் படிவங்களை ஜப்பானிய தூதரக வளாகம், 12/1, சென்டாப் ரோடு, தேனாம்பேட்டை, சென்னை  600018 என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.
அல்லது www.studyjapan.go.jp/en/toj/toj0307e.html#1. இணையதளத்தில் டவுண்லோடு செய்தும் விண்ணப்பிக்கலாம். 

விவரங்களுக்கு 044 - 2432 3860 / 63 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 21.

0 comments:

Post a Comment

Dear Friends,

வாசகர்களுக்கு வணக்கம்,

தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் பாடசாலை.

Page Navigation

Enter Your Details For Padasalai Contact Form.


அன்பார்ந்த வாசகர்களே,

தங்கள் விவரத்தை இங்கு தரப்பட்டுள்ள படிவத்தில் நிரப்பவும். இதன் மூலம் நாங்கள் உங்களை எளிதாக தொடர்பு கொள்ளவும், தங்களின் தனிப்பட்ட வினாவிற்கு பதிலளிக்கவும் இயலும்.
Click Here and Entry Your Contact Form Detail.