NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வாசிப்பு திறனை அதிகரிக்க தினமும் 2 மணி நேரம் கூடுதல் வகுப்பு:பள்ளிக்கல்வி துறை அதிரடி உத்தரவு.

          அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி களில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையான மாணவ, மாணவியரிடையே, வாசிப்புத்திறனை அதிகரிப்பதற்காக, தினமும், 2 மணி நேரம், கூடுதலாக சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. 'இது, கிராமப்புற மாணவர்களுக்கு, பல சிக்கல்களை ஏற்படுத்தும்' என, ஆசிரியர் கூறுகின்றனர்.

திருப்தியில்லை:

அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரகம் (எஸ்.எஸ்.ஏ.,), ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையான மாணவ, மாணவியரின் கல்வித்தரம் குறித்து, ஆய்வு நடத்தியது. இதன் முடிவு, கல்வித் துறை அதிகாரிகளுக்கு, திருப்தி அளிக்கும் வகையில் இல்லை.இதையடுத்து, 'மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த, ஆசிரியர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஏற்கனவே, தொடக்கக் கல்வி இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.

இந்நிலையில், 'அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, காலை ஒரு மணி நேரமும், மாலையில், ஒரு மணி நேரமும், கூடுதலாக, சிறப்பு வகுப்பு எடுக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறை, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.துறையின் உத்தரவு அடிப்படையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், சாந்தி அனுப்பியசுற்றறிக்கையில், 'ஆசிரியர்கள், சுழற்சி அடிப்படையில், தினமும், கூடுதலாக 2 மணி நேரம் சிறப்பு வகுப்பை நடத்தி, மாணவர்களின் வாசிப்புத் திறனை, குறிப்பாக, ஆங்கில வாசிப்புத் திறனை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்துஉள்ளார்.முதன்மைக் கல்வி அலுவலர்களின், இந்த நடவடிக்கைக்கு, ஆசிரியர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். ஆனால், நடைமுறை ரீதியாக, கிராமப்புற மாணவர்களுக்கு, பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் எனவும், ஆசிரியர் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழக தலைவர், தியாகராஜன் கூறியதாவது:

கூடுதல் வகுப்பு எடுக்க, நாங்கள் தயார். தற்போது, கிராமப்புறங்களில், காலை 9:30 மணிக்கு, பள்ளி துவங்கி, மாலை 4:30க்கு முடிகிறது. தற்போதைய உத்தரவால், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர், காலை 8:30 மணிக்கே, பள்ளிக்கு வர வேண்டும். மாலையில், 5:30 மணி வரை, வகுப்பில் இருக்க வேண்டும்.அரசுப் பள்ளிகளில், ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் தான் படிக்கின்றனர். பெரும்பாலான மாணவர், காலையில் சாப்பிடாமல் கூட, பள்ளிக்கு வருகின்றனர். நீண்ட தொலைவில் இருந்து, பஸ்கள் மூலமாக வருகின்றனர்.

இருட்டிவிடும்:

எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள், மிகவும் சிறியவர்கள். இவர்களை, காலை 8:30 மணி முதல், மாலை 5:30 மணி வரை, பள்ளியில் இருந்தால், சோர்வடைவர். மேலும், காலை 7:00 மணிக்கு, கிளம்பினால் தான், 8:30 மணிக்கு, பள்ளிக்கு வர முடியும். அதேபோல், மாலையில் வீட்டுக்குச் செல்ல இருட்டிவிடும்.இதுபோன்ற நடைமுறை சிக்கல்கள் தெரியாமல், முதன்மைக் கல்வி அலுவலர்கள் உத்தரவு பிறப்பிக்கின்றனர். கூடுதல் வகுப்பு, நடத்தியே தீர வேண்டும் எனில், இரு வேலைகளிலும், மாணவர்களுக்கு, சிற்றுண்டி தர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தியாகராஜன் தெரிவித்தார்.




4 Comments:

  1. காலாண்டு ,அரையாண்டு விடுமுறைகளில் சிறப்பு வகுப்புகள் என்றபெயரில் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்ப்டுகின்றார்கள்.விழாக்களில் கலந்து கொள்வது ,உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வது என்பது 10 ஆம் வகுப்பு,+2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கிடையாது.பள்ளிகளில்9ஆம்வகுப்பு மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பு பாடங்க்ளும்,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு+2 பாடங்களும் நடத்தப்படுகின்றன.மாணவர்கள் கசக்கிப்பிழியப்படுகிண்றார்கள். தனியார் பள்ளிகளில் மட்டுமல்லாமல் தற்பொழுது அரசுப்பள்ளிகளிலும் இத்தகையப்போக்கு தலைத்தூக்க ஆரம்பித்துள்து.குறிப்பாக நாமக்கல், தர்மபுரி,பெரம்பலூர்,மாவட்டங்களில்.தலைமை ஆசிரியர்கள்,சிறப்பு வகுப்புகளுக்கு இப்பிபோதே அட்டவணை தயார் செய்துள்ளார்கள். வருகை தராத மாணவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுகின்றார்கள்.சிறப்பு வகுப்புகள் நடத்துவது தொடர்பாக நீதி மன்றத்தில் வழ்க்கு நிலுவையில் உள்ளது.நீதி மன்றம் இடைக்கால உத்தரவு வழங்கி இத்தகையசிறப்பு வகுப்புகளை தடை செய்யவேண்டும்.அல்லது பள்ளிக்கல்வித்துறை உ த்தரவிடவேண்டும்.சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவிடும் தலைமைஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகமல் தடுக்கவேண்டும்.மாணவர்களின் மன அழுத்தமே பிற்காலங்களில் வன்முறையாக மாறுகிறது. மாணவர்களின் மோதல்கழுக்கும் இதுவே அடிப்படைக்காரனமாக அமைந்து விடுகிறது. நீதி போதனை வகுப்புகள் தொடங்கப்படவேண்டியது அவசியம்.

    ReplyDelete
  2. First teachers appointment pannunga appuram visit poi parunga students vasippu thiran eppadi irukkunu therium

    ReplyDelete
  3. 1முதல்5ஆம் வகுப்புவரை அட்டைகளைக்கொண்டு பாடம் நடைபெறுகிறது.இதில் வாசிப்புக்கு முக்கியத்தும் தரப்படுவதில்லை.மேல் வகுப்புகளில் மாணவர்களுக்குஇடார் பாடு உண்டாகிறது.அட்டையைக்கொண்டு மாணவர்கள் படிக்காமல் ,புத்தகங்களைப் கொண்டு பாடம் படிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    ReplyDelete
  4. தமிழ் ஆசிரியர்கள்

    இதுக்கு முழு காரணமே தமிழ் ஆசிரியர்கள் அதிகம் இல்லாததால்தான். அதிக பணியிடங்களை தமிழுக்காக ஒதுக்கினாள் இந்த நிலைப்பாடு மாறும்.

    2013 தகுதி தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற தமிழ் ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளவும்.

    அழைப்பேசி :

    7598000141 SALEM, DHARMAPURI , KRISHNAGIRI

    81148810701 CUDDALORE,VILUPURAM,NAGAPATTINAM

    7867953033 THIRUNELVELI, THOOTHUKUDI, KANYAKUMARI

    7639497834 THIRUVANNAMALAI, VELLORE

    9943228971 THIRUCHY, PUDUKOTTAI

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive