NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

64 வகையான பதிவேடுகள்; ஆசிரியர்கள் குமுறல்

              அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில் 64 வகையான பள்ளி பராமரிப்பு பதிவேடுகளை ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் வாங்கி வருகின்றனர்.தமிழகத்தில் 36 ஆயிரம் அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகள் உள்ளன. இவற்றில், மாணவர்கள் நலன் கருதி, பாட புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், மதிய உணவு என பல்வேறு நலத்திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது. இதே போல், உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப், இலவச சைக்கிள் வழங்கப்படுகின்றன.
              தமிழகத்தில் ஆண்டுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் பள்ளி கல்வித்துறை செலவிடுகிறது. ஆனால், அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில், பள்ளி பராமரிப்புக்கான பள்ளி பதிவேடு, ஆசிரியர்களுக்கான வருகை பதிவேடு, மாணவர் வருகை பதிவேடு, ஊதிய பதிவேடு, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு பதிவேடு, வாசித்தல் திறன் பதிவேடு, பார்வையாளர் பதிவேடு, இலவச பொருள் வழங்கும் பதிவேடு, மாணவர் திறன் பதிவேடு, தணிக்கை பதிவேடு, காலநிலை அட்டவணை என 64 வகையான நோட்டுகளை, பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் வாங்கி பராமரிக்கின்றனர். மேலும், மாணவர்களுக்கான பாட புத்தகங்கள், சீருடைகளை, ஆண்டுக்கு மூன்று முறை, வாடகை வாகனம் பிடித்து, கொண்டு வரவேண்டியுள்ளது. இதனால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.இது குறித்து தலைமை ஆசிரியர்களிடம் கேட்டபோது, தலைமை ஆசிரியர்களுக்கு வெளியே சொல்ல முடியாத சிரமங்கள் நிறைய உள்ளன. மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, குறைகளை கேட்டு, நிவர்த்தி செய்ய அரசு முன்வர வேண்டும், என்றனர்.




3 Comments:

  1. தலைமை ஆசிாியருக்கு உண்டான பணியே பதிவேடுகளை கையாளுவதுதானே. இதிலென்ன கஸ்டம். ஒவ்வொரு பள்ளியிலும் தலைமையாசிாியா் தன்னுடைய சொந்த பணத்தில் இத்தனையையும் செய்யவில்லை. பள்ளிகூடம் என்றாலும் சாி மற்ற எந்த ஒரு அரசு அலுவலகமானாலும் சாி செலவுக்கு தேவையான பணம் தேவையான இடத்தில் இருந்து எடுத்துகொள்ளப்படுகிறது. இது அங்கு பணிபுாியும் ஒவ்வொரு ஊழியா்களுக்கும் நன்றாக தொியும். நான் சொல்ல தேவையில்லை.

    ReplyDelete
    Replies
    1. Thevaiyana idam pallikalil entha idam

      Delete
    2. இது அங்கு பணிபுாியும் ஒவ்வொரு ஊழியா்களுக்கும் நன்றாக தொியும். நான் சொல்ல தேவையில்லை.
      ராமன் வெள்ளையன் நண்பா் அவா்களே தாங்கள் புதிதாக பணியில் சோ்ந்த அரசு அலுவலரோ.

      Delete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive