NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET - பத்து நாளில் தீர்ப்பு வெளியிடப்படலாம்?

TET – வழக்கு
பத்து நாளில் தீர்ப்பு வெளியிடப்படலாம்?
          இன்று காலை (16.09.2014) சென்னை நீதிமன்றத்தில் டெட் இடஒதுக்கீடு மற்றும் வெயிட்டேஜ் குறித்த வழக்குகள் விசாரணை நடைபெற்றது
          வழக்கு தொடுத்தவர்கள் சார்பாக ஐந்து முக்கிய வழக்குரைஞர்களும், அரசு தரப்பில் ஐந்து அரசு வழக்கறிஞர்களும் வாதிட்டனர். அமர்வு நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதி. திரு. அங்கோத்ரி மற்றும் மனிஷ்குமார் ஆகியோர் வழக்கை விசாரித்தனர்.

1) இடஒதுக்கீடு வழக்கு

         இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இடஒதுக்கீடு என்பது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட இயலாது என வழக்கு வாதத்தின் போது நீதிபதி அவர்கள் தனது கருத்தை வெளியிட்டார். எனவே இடஒதுக்கீடு வழக்கில் நீதிமன்றத்தீர்ப்பு எவ்வாறு இருக்கும் என ஓரளவிற்கு நீதிபதிகள் கோடிட்டு காட்டியுள்ளனர்.

2) வெயிட்டேஜ் முறைக்கு எதிரான வழக்கு

               வெயிட்டேஜ்க்கு எதிரான வழக்கு இன்று அதிக நேரம் விசாரிக்கப்பட்டது. அப்போது அரசு வழக்கறிஞர் டெட் அறிவிக்கப்பட்ட தேதி, கீ ஆன்சர் வெளியிடப்பட்ட தேதி, கீ ஆன்சர்கள் சார்பான வழக்கு முடிவு அறிவிக்கப்பட்ட தேதி, நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி பழைய வெயிட்டேஜ் முறை (Ex: 90-104 Slab Method) மாற்றப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அறிவியல் பூர்வமான வெயிட்டேஜ் கணக்கிடும் முறை குறித்த அரசாணை வெளியிடப்பட்ட தேதி, சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்ற தேதி, இதன் அடிப்படையில் தற்காலிக பட்டியல் வெளியிடப்பட்ட தேதி, கலந்தாய்வு நடைபெற்ற விவரம், தேர்வர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தை தேர்ந்தெடுத்தும் பணிபுரிய இயலாத சூழல் போன்றவைகள் குறித்து தெளிவாக கருத்துகளை எடுத்துவைத்தார்.
        மேலும் இத்தகைய வழக்குகளால் கிராமப்புற மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது எனவும், விரைவில் வழக்குகளை முடித்து தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வர்கள் பணியில் சேர அனுமதி வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
         வெயிட்டேஜ் முறைக்கு எதிராக போராடிய வழக்கறிஞர்கள் ”12ஆம் வகுப்பில் பல்வேறு குரூப்கள் உள்ளன. எனவே ஒரு சில குரூப்களில் 600 மதிப்பெண்கள் வரை செய்முறை மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் அதே சமயம் கணிதம், அறிவியல் பாடங்கள் படிக்கும் மாணவர்களுக்கு இத்தகைய செய்முறை தேர்வு மதிப்பெண்கள் வழங்கப்படுவதில்லை. மேலும் அதிக மதிப்பெண் பெற இயலாத கிராமப்புற அரசு மாணவர்களுக்கு இந்த வெயிட்டேஜ் முறை எதிரானது. எனவே இந்த மாணவர்கள் ஆசிரியர் பணியில் சேர விழையும் போது பாதிக்கப்படுகிறார்கள்” என கூறினார். அப்போது மாண்புமிகு நீதிபதி. மருத்துவம், பொறியியல் போன்ற பாடங்களில் மாணவர்கள் சேரும்போதோ அல்லது இதர கல்லூரிகளில் சேரும்போதோ இத்தகைய கேள்விகள் இதுவரை எழவில்லையே என குறுக்கிட்டு எதிர் வழக்குரைஞர்களிடம் கேட்டார்.
         மேலும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் கல்லூரிகள் பலவும் ஒவ்வொரு வகையான பாடத்திட்டங்களை கொண்டுள்ளன. ஒரு சில கல்லூரிகள் குறிப்பிட்ட பாடங்களுக்கு செய்முறை பயிற்சி மதிப்பெண்கள் வழங்குகின்றன. ஆனால் அதே பாடங்களுக்கு இதர கல்லூரிகள் இத்தகைய மதிப்பெண்களை வழங்குவதில்லை. மேலும் முறையான கல்லூரிகளில் பயில்வோருக்கும், அஞ்சல் வழிக்கல்வியில் பயில்வோருக்கும் மதிப்பெண் பெறுவதில் வித்தியாசம் உள்ளது. எனவே கல்லூரி மதிப்பெண்களை வெயிட்டேஜ் முறைக்கு எடுத்துக்கொள்வதில் உள்ள சிக்கல்களை தெளிவாக எடுத்துரைத்தார். அப்போது மாண்புமிகு நீதிபதி ”டெட் மதிப்பெண்கள் தானே 60 சதவீதத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது, 12 ஆம் வகுப்பு உட்பட இதர மதிப்பெண்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்கள் 40 சதவீதத்திற்கு தானே எடுத்துக்கொள்ளப்படுகிறது?” குறிப்பிட்டு கேள்விகள் கேட்டார். மேலும் ”அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் ஏதேனும் குறை இருப்பின் அந்த குறைகளை களைந்து அரசாணை வெளியிட நீதிமன்றம் அறிவுறுத்துமே தவிர, இப்படித்தான் அரசாணை வெளியிடப்பட வேண்டும் என நீதிமன்றம் இறுதி செய்து அறிவிக்காது” என நீதிபதி தனது கருத்துரையில் கூறினார்.
  

      முற்பகலில் அரசாணை 71 க்கு எதிராக போராடிய வழக்கறிஞரை பல குறுக்குக் கேள்விகள் கேட்ட மாண்புமிகு நீதிபதி, பிற்பகலில் எதிர் தரப்பு வழக்கறிஞர் எடுத்து வைத்து திறமையான வாதக் கருத்துகளை முழுமையாகவும், மிகப்பொறுமையாகவும் கேட்டறிந்தார்.
           இன்றுடன் இவ்விரு வழக்ககள் சார்ந்த விவாதமும் முழுமையாக முடிவு பெற்றன. தற்போது இரு தரப்பு வழக்கறிஞர்களுமே வாதிட்ட தங்கள் சார்பான கருத்துகளை எழுத்து வடிவில் வழங்க வேண்டும். மேலும் தற்போது நடைபெற்ற வழக்கு விவாதத்தை பற்றிய கருத்துகளில் ஏதேனும் மாற்றம் இருப்பினோ அல்லது வேறு ஏதேனும் புதிய கருத்துகளை சேர்க்க வேண்டி இருப்பினோ அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் இருவரும் எழுத்து பூர்வமாக தங்கள் கருத்துகளை நீதிமன்றத்தில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தாக்கல் செய்யலாம் என நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.

        எனவே வரும் வெள்ளிக்கு பிறகு அடுத்த வார இறுதியிலோ அல்லது 10 நாட்களுக்கு உள்ளாகவோ நீதிபதிகள் தனது தீர்ப்பை வழங்குவார் என எதிர்பார்க்கலாம். தற்போது நடைபெற்றுள்ள கலந்தாய்வு அரசாணை 71 ன் படி நடைபெற்றுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட இறுதி பட்டியலில் தெளிவாக கூறியுள்ளதால் தேர்வர்கள் நீதிமன்ற தீர்ப்பை மிக ஆவலாக எதிர்நோக்கியுள்ளனர்.

சென்னை நீதிமற்த்திலிருந்து – பாடசாலை வாசகர்.






42 Comments:

  1. நடுநிலை தவறாமல் செய்தி வெளியிடும் பாடசாலை வலைதளத்தை tetவழக்கின் போக்கு குறித்து விரிவாக பதிவிட கேட்டகொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வழக்கு நீதிமன்றத்தில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் நமது கருத்தினை கூறுவதை விட இறுதி தீர்ப்பு வரும் வரை காத்திருப்பதே சிறந்தது என கருதுகிறோம்.

      Delete
    2. Sir pg la last cutoffla postingah mis paniten sir.pg 2 nd list related news podunga sir pls..

      Delete
    3. நான் மாறமாட்டேன்
      மாறமாட்டேன் !!!
      நான் மாறமாட்டேன்
      மாறமாட்டேன் !!!
      எனக்கு தேவை தரமானா ஆசிரியர் சுமார் 12000துக்கு ம்மேல்
      அவர்களை தேர்வும் செய்து விட்டேன் அதனால் நான் மாறமாட்டேன் மாறமாட்டேன் !!

      Delete
    4. மக்களுக்காக. சட்டமா , சட்டத்திற்க்காக. மக்களா சிந்தியுங்கள்

      Delete
  2. Pls publish case full details

    ReplyDelete
  3. Cm case and tet case 27th wait and see

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. நன்றிகள் பல பாடசாலைக்கு

    ReplyDelete
  6. This shows there won't be any change in waitage system and selected candidate's appointment

    ReplyDelete
  7. உங்கள் பணி அளப்பறியது..தொடரட்டும் உங்கள் பணி,நன்றி பாடசாலை

    ReplyDelete
    Replies
    1. தங்களின் நேற்றைய கேள்விக்கு நாம் பதில் அளித்திருப்பதை கவனித்திருப்பீர்கள் என நம்புகிறோம்.

      நன்றி திரு. பாலகுமரன் பரிதி.

      Delete
    2. Sir yarum yentha adminum pg second list pathi solala sir..nenga mattum last week comment panirunthenga.pls any 2nd list related news solunga sir..yarum kandukala.tet news mattum than varuthu..

      Delete
    3. Kutty k sir, i am also affected last cut off in pg.My m n 9965444086.

      Delete
  8. இறுதி தீர்ப்பு வரும் வரை காத்திருப்பதே சிறந்தது என நாமும் கருதுகிறோம். உயர்நீதி மன்றம் நல்லதீர்ப்பு வழங்குமென்று!

    ReplyDelete
  9. This show there is no difference between people who studied before 10 or 15 years this is the case but no one argued about this please consider this point and do the necessary

    ReplyDelete
  10. மன்னிக்கவும் பதில் கிடைக்கவில்லை..

    ReplyDelete
  11. dear padaslai, you are the only person tells truth briefly thanking you and i think there is no change recarding 5% relaxation, those who are attend counselling they defenetyl get job and also any few changes will come on g.o 71

    ReplyDelete
  12. I make mistake tet certificate download. My chance is over what can i do sir pls clarify

    ReplyDelete
  13. Sir trb help lineku call pannunga unga reg no keppanga.
    10 daysla marupadium oru chance tharuvanga.

    ReplyDelete
  14. Hi admin sir weightagela ethavathu changes varuma?
    Vanthalum athu selected candidatesa affect pannuma?

    ReplyDelete
  15. COURT NO. 2 Madurai court, Bench Today 3 justice are sitting
    HON'BLE MR.JUSTICE M.JAICHANDREN
    HON'BLE MR.JUSTICE S.NAGAMUTHU
    HON'BLE MR.JUSTICE R.MAHADEVAN
    BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT
    TO BE HEARD ON WEDNESDAY THE 17TH DAY OF SEPTEMBER 2014 AT 2.15 P.M.

    ReplyDelete
    Replies
    1. Puriala theliva sollunga sir

      Delete
  16. Madurai courtla stay cancel aguma indru

    ReplyDelete
  17. கணம் நீதிபதி அவர்களே நாங்கள் அறியாத ஊரில் அதாவது குக் கிராமத்தில் பள்ளி கல்வியை முடித்துள்ளோம். எங்கள் ஊரில் 25 மாணவர்கள் தான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்தோம். அதில் நான் 602 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றேன் எங்கள் ஊரில் 4 மாணவர்கள் தான் தேர்ச்சி பெற்றனர். அந்த காலத்தில் மருத்துவராக வேண்டும் என்றால் 90 சதவிதம் மேல் மார்க் வேண்டும். அந்த கணவூ எல்லாம் சிட்டி டவூன் சைடு மாணவர்கள் தான் அதை எல்லாம் ஆசைபடமுடியூம். பிறகு என்னுடைய மார்க் கல்லூரியில் இடம் கிடைத்தது. நான் ஒரு அளவூக்கு வயலில் வேலை செய்து தான் படித்தேன். தேர்வூ சமயத்தில் வயலில் வேலை இருக்கும் அப்போது வேலையூம் பார்க்கனும் படிப்பும் படிக்கனும் பிறகு அரியர்ஸ் வைத்து 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தான் டிகரி முடித்தேன். டிகரி முடித்து என்ன செய்யலாம் என்று எனக்கு சொல்லுவதற்கு யாரும் இல்லை.

    இந்த சு+ழ்நிலையில் பி.எட். படித்தேன் அவ்வாறு பி.எட். கல்லூரிக்கும் வயல் வேலைய மற்றும் பஸ் பிரச்சனையால் சரியாக போக முடியவில்லை. நான் குறைந்த அளவே மார்க் வாங்க முடிந்தது. 60 சதவீதம் தான்.

    எனக்கு திருமணம் நடைபெற்றது. வயலில் உள்ள வருமானத்தை நம்பி. பிறகு படிப்படியாக குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. மழையூம் தக்க சமயத்தில் எங்களுக்கு கருணை காட்ட வில்லை. நான் தமிழ் ஆசிர்pயர் படிப்புக்கு படித்தேன். நான் வேலை வாய்ப்பு பதிவூ செய்து காத்திருந்து காத்திருந்து வேலை கிடைக்காததால் வெறுத்து போய் கிடைக்கிற வேலையை செய்து குடும்பம் நடத்தி வந்தேன்.

    அரசு டெட் என்ற தேர்வை அறிவித்தது. இது எனக்கு ஒரு வாழ்வா சாவா? என்ற போராட்டத்திற்கிடையில் நான் சிறப்பு வகுப்பு நடத்தும் பாடசாலைக்கு சென்று படித்தேன். அதில் நான் 115 எடுத்தேன். எப்படியோ எனக்கு வேலை கிடைத்துவிடும் என்று என் குடும்ப உறுப்பினர்கள் மிகவூம் சந்தோதஷமாக இருந்தார்கள்.

    பிறகு வெயிட்டேஜ் என்ற அடிப்படையில் என்னுடைய கணவூ நொறுங்கி விட்டது. தற்சமயம் மீண்டும் கிடைக்கும் வேலைலைக்கு சென்று கொண்டிருக்கிறேன். இந்த நிலை நம்மில் பலருக்கும் இருக்கும் இதை நான் எனது கண்ணீர் துளிகளுடன் உங்கள் பார்வைக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.

    ReplyDelete
  18. 2012 ill Tet exam kkum 5% relaxation
    Vaendum.
    Naangal mattum enna paavam
    Seithom?
    2012 Tet ill 82-89 Mark pettravarkal
    Please call me
    9944246797.

    ReplyDelete
    Replies
    1. Sir Nanum than 2012la 89 apo relaxation yean kekula????

      Delete
    2. My age is 42. I got 86 in 2012, Now 2013 I got 94 . First C.V. attended. But No Job.

      TET 2013 is like a musical chair. I have lost my seat. Relaxation brothers and G.O.71 brothers occupied my seat. what shall I do????

      Delete
    3. 15, 20. வருசமா வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை இப்பவருமா , அப்பவருமானு காத்துக்கிட்டு இருக்கும்போது எங்க. கனவை தகர்த்துட்டாங்க. , சரி டெட் எழுதி பாஸ் செய்தால் வேலைவாய்ப்பு பதிவுமூப்பின்படி வேலைகொடுப்பார்கள் என்று பார்த்தால் அதுவும் நடக்காதுபோல் தெரிகிறது, என்னசெய்ய. கடவுள்தான் துணை.

      Delete
    4. உடனடித்தீர்வு 10. ,15. ,20. ஆண்டுகளாக. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் காத்திருப்பவர்களை ( TET. பாஸ் செய்தவர்களை மட்டும்) நியமனம் செய்யலாம்

      Delete
  19. The immediate solution for TET is give appointment order to all the above 90 candidates. Most of them already selected in the provisional list. The remaining candidates if they get the post in the remaining vacancy in corporation schools and this academic year vacancy also will be given to them. 99% problem solved.

    ReplyDelete
    Replies
    1. வெயிட்டேஜ் வெயிட்டேஜ் ,யார்கண்டுபிடிச்சாங்க. இந்த. வெயிட்டேஜை .

      Delete
  20. சிவஞானம் சம்மந்தன் சார் அம்மாவிடம் நேரிடையாக. கோரிக்கை மனு தாருங்கள் கண்டிப்பாக. கருணை காட்டுவார்கள்

    ReplyDelete
  21. Padasalai -nice work to teaching society

    ReplyDelete
  22. ஒவ்வொருவருக்கும் பொருந்தும் அரசாணை எந்த அரசாலும் முடியாது.ஒருவருக்கு வெற்றி என்றால் மற்றவருக்கு தோல்வியே இதுவே உலக நியதி.தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்க கூடாது என்ற எண்ணம் என்றும் தோல்வியே

    ReplyDelete
  23. கோட்டை அழீங்க, முதல்லஇருந்து வருவோம்

    ReplyDelete
  24. மீண்டும் ஒரு தேர்வை வையுங்க

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் வழங்கினால், யாரவது நீதிமன்றத்துக்கு சென்று எனது 12ஆம் வகுப்பு மதிப்பெண்னையும் கணக்கில் கொள்ள வேண்டும் என கேட்பாரா..? இந்ந பிரச்சனைக்கு அரசின் தவறான கொள்கை முடிவே காரணம்.

    ReplyDelete
  27. ARASU SEEKIRAM TET-KU ORU NALLA SOLUTION KONDU VARA VENDUM.
    SENIORSKU FIRST JOB KODUKA VENDUM.
    ARASU INDHAI NIRAIVETRUMA.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive