NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்வித்துறையில் ரூ. 37 லட்சம் மோசடி:அதிகாரிகள், ஆசிரியர்கள் மீது வழக்கு

        திருநெல்வேலி மாவட்ட கல்வித்துறையில் ௩7 லட்ச ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் அதிகாரிகள், தலைமை ஆசியர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது.
திருநெல்வேலியில் 2013 அக்., 26ல் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற தனித்திறன் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது. உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், அறநிலையத்துறை அமைச்சர் செந்துார்பாண்டியன், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் உஷாராணி, அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் பங்கேற்றனர்.

          அந்நிகழ்ச்சிக்கு 3 லட்ச ரூபாய் மட்டுமே செலவிட அரசு அனுமதி அளித்தது. இருப்பினும் உணவு, மேடை அலங்காரம், விழா மலர் தயாரித்தல், வரவேற்பு என பல பணிகள் தனியார் பள்ளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் பள்ளி மாணவர்களிடம் தலா ஐந்து ரூபாய் வீதம் 23 லட்சம் ரூபாய் வசூலித்தனர்.பள்ளிகளின் நிர்வாகத்தினரிடமும் நன்கொடையாக 40 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளனர். இதற்கான வரவு, செலவு கணக்கு முறையாக பராமரிக்கப்படவில்லை. இதுகுறித்து நெல்லையை சேர்ந்த வக்கீல் பிரம்மா, தமிழக முதல்வருக்கும், அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பினார்.

பணம் வசூலித்த 40க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள், உதவி கல்வி அலுவலர்களிடம் நெல்லை போலீசார் விசாரித்தனர். இருப்பினும் ஒரு ஆண்டுக்கு பின் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். முதன்மைக் கல்வி அதிகாரி, நெல்லை, சேரன்மகாதேவி, தென்காசி உள்ளிட்ட கல்வி மாவட்ட அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் 10 பேர், ஊழியர்கள் என 15க்கும் மேற்பட்டோர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவு களில் வழக்குப்பதியப்பட்டது.அப்போதைய முதன்மைக் கல்வி அதிகாரி ஜெயக்கண்ணு, தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரிகிறார்.




2 Comments:

  1. இந்த விஷயம் பிரம்மாவுக்கே வெளிச்சம். திருநெல்வேலி மட்டுமே அல்வா சாப்பிடவில்லை. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டமே அரசுக்கு அல்வா அல்லவா கொடுக்கிறது.? அதோடு இருட்டுகடை அல்வா எது தெரியுமா? அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் +2 தேர்வு எழுதுபவர்கள் சுமார் 6,00,000 லட்சம் பேர்.இவர்கள் அனைவரும் கண்டிப்பாக +1 பரீடசை எழுதிவிட்டுதான் வரணும். ஆனால் ஒவ்வொரு மாணவனிடமும் ரூ31.00 வசூலித்து மாவட்ட அலுவல்ருக்கு அனுப்பி அரசு கருவூலத்தில் ஏறாத கருப்பு மாவட்ட சில்லரை செலவு அந்தந்த மாவட்ட அலுவலரே செல்வு செய்து முடிக்கிறார்கள். இதற்கு அதற்கென தலைமையாசிரிரும் உள்ளனர். இதை கொண்டு மாநில அளவில் சில்லறை கைச்செலவு ரூ 6,00,000*31=1,86,00,000.00 செல்வு செய்வதாக கணக்கு. அதில் இரு திருமணங்கலும், ஒரிரு பங்களாவும், மகிழுந்துகளும் வாங்கி அனுபவிக்கிறார்கள். இதற்கு எந்த ஆடிட்ட்டும் இல்லை. இருட்டு கடை அல்வா விஷயம். கல்விக்கொள்ளை. படித்து வேலையில்லாதவங்க மாடு மேய்கக்றோம்

    ReplyDelete
  2. God, help our poor student's life.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive