NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆய்வக உதவியாளர் தேர்வில் வெற்றி பெற எளிய ஆலோசனைகள்

ஆய்வக உதவியாளர் தேர்வில் வெற்றி பெற எளிய ஆலோசனைகள்:

மனரீதியான ஆலோசனைகள்:
1.ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு நம்மைப்போன்று பல இலட்சம் பேர் போட்டி போட்டுள்ளனர் இதில் எப்படி நமக்கு கிடைக்கும் என்ற தாழ்வு மனப்பான்மையை முதலில் விட்டொழியுங்கள். ஏனெனில் இத்தாழ்வு மனப்பான்மை தான் நம் வெற்றிக்கு முதல் எதிரி..


2.அடுத்து நம் மாவட்த்தில் வெறும் 108 பணியிடம் தான் உள்ளது.. இக்குறைவான பணியிடத்திற்கு கிடைக்காது என்ற குறுகிய மனப்பான்மையை மாற்றுங்கள் ஏனெனில் நமக்கு தேவையானது 108 பணியிடமம் அல்ல!! நமக்கு தேவை ஒரே ஒரு பணியிடம் தான் என்றும் மீதி 107 பணியிடம்உள்ளதெ என்று அதிகப்படுத்தி நினைக்க வேண்டும்.

3.முழு மனநிறைவோடு தேர்வுக்கு செல்ல வேண்டும்.

4.நான் அதிர்ஸ்டம் இல்லாதவன் எனக்கு நேரம் சரியில்லை என்ற குருட்டு நம்பிக்கையை புறந்தள்ளுங்கள்.

5.தேர்வு முடிவுக்கு பின் 'நான் இன்னும் கொஞ்சம் படித்திருந்தால் கூடுதலாக 10 மதிப்பெண் பெற்று தேர்வாகி இருப்பேனெ' என்று தேர்வு முடிவு வந்தபின் புலம்புவதை விட ....இனி இருக்கும் ஒவ்வொரு நொடியும் பயன்படுத்தலாம்.

தேர்வு முறையில் குழப்பமே வேண்டாம்:
1.ஆய்வக உதவியாளர் தேர்வு முழுக்க முழுக்க பணம் விளையாடும் ஆதலால் நாம் இதில் வெற்றி பெற முடியாது என்ற தவறான எண்ணம் நம்மை மேலும் சோம்பேறியாக்கும்..ஆய்வாளர் தேர்வானது மிகச்சரியான முறையில் கேள்விகள் சரிபார்க்கப்பட்டு 100சதவீதம் முழு நம்பிக்கை தன்மையோடு நடைபெற அதிகம் வாய்ப்பபுள்ளது.

2.ஆய்வாளர் தேர்வு மையம் அனைவருக்கும் வெகுதூரம் போடப்பட்டிருக்கின்றன...மேலும் தேர்வறை முழுவதும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.. வெளியிடப்படும் மதிப்பெண் முறையும் வெளிப்படை தன்மை இருக்குமென கல்வித்துறை வட்டாரம் தெரிவிக்கின்றன. மேலும் சில புரோக்கர்களின் ஆசைவார்த்தையில் இல்பொருள்காட்சி கனவு கண்டிருந்தால் அதை முழுவதும் நீக்கி விட்டு முழுநிறைவோடு தேர்வறைக்கு செல்லுங்கள்

நினைவில் கொள்ளவேண்டிய பாடப்பொருள்கள்:
1.தேர்வு தமிழ் மற்றும் ஆங்கில வடிவமைப்பை கொண்டிருக்கும் ஆதலால் ஆங்கில மீடியம் உள்ளவர்கள் கவலைப்பட தேவையில்லை.

2.அறிவியலில் 120 வினாக்கள் கேட்பதால் அதனை அதிகம் முக்கியத்தவம் கொடுப்பது நன்று 

3.தேர்வுக்கு முன் கல்வி வலைதளங்களில் உள்ள மாதிரி வினாத்தாளை பயிற்சி எடுத்து நம் திறமையை அளவிடலாம்

4.விலங்கியல் தாவரவியல் சம்பந்தப்பட்ட பாடப்பொருட்கள் அனைத்தும் அனைவரும் மனப்பாடம் செய்து விடுவர் ஆனால் வேதியியலில் வரும் குறியிடுகள் தனிமங்கள் மூலக்கூறுகள் சோதனைகள் ஆகியவை அனைத்தும் கடினமாக இருப்பதால் வேதியியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கலாம்..

5.இயற்பியலில் அலகு கண்டுபிடிப்பு அறிவியல் அறிஞர்கள் மற்றும் இயற்பியலோடு சம்பந்தப்பட்ட கணக்குகள் கேட்கப்படலாம் ஆதலால் இக்கணக்குகளை போட்டுப்பார்ப்பது நல்லது(எ.கா அளவைகள்)

6.பொது அறிவு பகுதியில் வரலாறு குடிமையியல் புவியியல் மற்றும் நடப்பு நிகழ்வு கேட்கப்படும்.. நடப்பு நிகழ்வை பொறுததவரை கிரிக்கெட் உலககோப்பை ஐபிஎல் அறிவியல் கண்டுபிடிப்பு மத்திய அமைச்சரைவை முக்கிய மசோதாக்கள் மற்றும் சமிபத்திய விண்வெளி ஆய்வு சமிபத்தில் அனுப்பபட்ட வின்கலம் இராய்க்கெட் என அனைத்து விவரங்களையும்  அறிந்து கொள்ளுங்கள்.

''தேர்வுக்கு பதிந்தவர்கள் பலர்
தேர்வுக்கு செல்பவர்கள் சிலர்'
படித்து செல்பவர்கள் பாதி
வெற்றி பெறுவர்கள் மீதி''

தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்களுடன்
பி.இராஜலிங்கம் புளியங்குடி





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive