NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET தேர்வை ரத்து செய்வது கூடாது - மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை

        ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்வது கூடாது,கல்வி உரிமை சட்டப்படி மாணவர்களை சேர்க்காத பள்ளிகள் மீது நடவடிக்கை: மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை

   தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்கத்தினர் அதன் தலைவர் அருமைநாதன் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதாவை சந்தித்து மனு அளித்தனர்.
அம்மனுவில் கூறியிருப்ப தாவது:
சென்னையில் சமீபத்தில் நடந்த தமிழ்நாடு நர்சரி, பிரை மரி, மெட்ரிகுலேஷன் மேல் நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளி கள் சங்க வெள்ளிவிழா மாநாட்டில் சில தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீ்ட்டில் சேர்க் கப்பட்ட குழந்தைகளுக்கான கட்ட ணத்தை தமிழக அரசு இதுவரை கொடுக்காமல் இருப்பதால் இந்த ஆண்டு முதல் கல்வி உரிமைச் சட்டத்தின்படி மாணவர்கள் சேர்க்கை நடத்தமுடியாது.
எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை, ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் மாநில அரசிடம் தடையில்லா சான்று பெறும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளனர். இந்த தீர்மானங்கள் மாணவர்-பெற்றோர் நலனுக்கு எதிரானவை.

கல்வி உரிமைச் சட்டத்தின்படி இந்த ஆண்டு மாணவர்களை சேர்க்காத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசால் விதிக்கப்படும் நிபந்தனைகளை நிறைவேற்றிய பள்ளிகளுக்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும். மேலும் எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்வது கூடாது.




2 Comments:

  1. TET exam . cancel panna ellorum kathranga. Etho arivali mathiri manu koduthangalam, athai websitelayum podanuma?

    ReplyDelete
  2. அநேகமாக இந்த மனு கொடுத்தவர்களுக்கு T.E.T COACHING CENTREகள் இருக்கும் அதனால் தான் தகுதி தேர்வு ரத்து செய்ய கூடாது என்று மனு கொடுத்திருக்கிறார்கள் .இந்த தேர்வால் அதிக பயன் அடை ந்தவர்கள் யார் யார் என்று மக்களுக்கு தெரியும்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive