NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும்?

         மத்திய அரசின் கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்ட தாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


           அதன்படி இலவச மற்றும் கட்டாய கல்வி சட்ட விதிமுறைகளை, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்.சி.டி.இ.) கொண்டு வந்தது. 2009-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சட்டம், தமிழகத்தில், 2010-ல் அமல் படுத்தப்பட்டு, 2011-ல் விதி முறைகள் வெளியிடப்பட்டன.

மேற்கண்ட விதிமுறைகளின்படி ஆண்டுக்கு ஒருமுறையாவது ஆசிரி யர் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் 2012-ல் ஜூலை மற்றும் அக்டோபரி லும், 2013-ல் ஆகஸ்டிலும் தேர்வு நடத்தப்பட்டது. இதன் மூலமாக அரசு பள்ளிகளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. நடப்பு ஆண்டு முடிய இன்னும் 5 மாதங்களே உள்ளன. எனவே, இந்த ஆண்டு தகுதித் தேர்வு நடத்தப்படுமா? என்று ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும், பிஎட் பட்டதாரிகளும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தினரை தொடர்பு கொண்டு கேட்டபோது, “ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சியில் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அளிக்கப்பட்ட 5 சதவீத மதிப்பெண் தளர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு ஜூலை 21-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது ஒத்திவைக்கப்பட்டது. எனவே, தேர்வு எப்போது நடைபெறும் எனத் தெரியவில்லை” என்று தெரிவித்தனர்.




4 Comments:

  1. Pg trb அடுத்த மாதம் அறிவிப்பு வர வாய்ப்பு இருக்கிறதா sir?

    ReplyDelete
  2. வழக்கு ஜூலை 21-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது கால அவகாசம் கேட்டது தமிழக அரசு.மேல் முறையீடு செய்யஉள்ளதால்.10மாத காலமாக தாமதம் செய்துவிட்டு தற்போது மேல் முறையீடு செய்ய உள்ளதால் தான் தகுதித்தேர்வு நடத்தப்படவில்லை.

    ReplyDelete
  3. first of all please give job the person who have got 90 in TET......need not weightage mark

    ReplyDelete
  4. weightage mark is need nor for TET....because it is Eligibility Test in tat test i got passi got 95 marks but u ask weightage what can i do?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive