NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மருத்துவக் காப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

         மருத்துவச் செலவு என்பது திடீரென வரக் கூடியது. ஆதலால் மருத்துவக் காப்பீடு எடுத்து வைத்துக் கொள்வது மிக முக்கியமானது. தனியார் காப்பீடு நிறுவனங்கள் நம்மிடம் பணம் பெற்றுக் கொண்டு காப்பீடு அளிக்கின்றன
 
             அதுவும் சில நோய்களுக்கும், அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு மட்டுமே. அதுபோல ஏழைகளுக்காகக் கொண்டுவரப்பட்டது முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடுத் திட்டம். இத்திட்டத்தின் பயனைப் பெற விண்ணப்பிப்பது எப்படி? அதற்கான தகுதிகள் என்ன? ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.

மருத்துவக் காப்பீடு திட்டம் என்பது என்ன?

நமக்கு ஏற்படும் சில மருத்துவ உதவிகளுக்குத் தேவையான பணத்தை அரசே செலுத்துவதுதான் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.

தகுதிகள்:
இத்திட்டத்தின் பயனைப் பெற ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் 72,000ரூபாய்க்குக் கீழே இருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:
கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனில் கிராம நிர்வாக அலுவலரிடமும், நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்கள் எனில் தாசில்தாரிடமும் வருமானச் சான்றிதழ் வாங்கிக் கொடுக்க வேண்டும்.
குடும்ப அட்டை இருக்க வேண்டும். குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் பயனைப் பெற முடியும்.

எங்கே விண்ணப்பிப்பது?
ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்திலும் காப்பீட்டுத் திட்ட மையம் இயங்கி வருகிறது. அந்த மையத்திற்கு சென்று விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களைக் கொடுக்கவும். பின்னர் அவர்கள் சொல்லும் தேதியில் குடும்பத்துடன் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவும். புகைப்படம் எடுக்கப்பட்டதும் ஓரிருநாட்களில் மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்படும்.

பயனை எப்படிப் பெறுவது?
இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் பதிவு பெற்ற தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுக் கொள்ளலாம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்பெற முடியும். இதன் மூலம் கீழ்கண்ட சிகிச்சைகளப் பெற முடியும்இதயம் மற்றும் இதய நெஞ்சக அறுவைச்சிகிச்சை/cardiology and cardiothoracic Surgery

புற்று நோய் மருத்துவம் /Oncology
சிறுநீரக நோய்கள் /Nephrology/urology
மூளை மற்றும் நரம்பு மண்டலம் /neurology and neuro surgery
கண் நோய் சிகிச்சை/opthalmology
இரைப்பை () குடல் நோய்கள் /Gastroenterology
ஒட்டுறுப்பு (பிளாஸ்டிக்) அறுவை சிகிச்சைகள் /Plastic Surgery
காது,மூக்கு மற்றும் தொண்டை நோய்கள்/E.N.T
கருப்பை நோய்கள்/Gynaecology
இரத்த நோய்கள் / Haematology
9
மருத்துவமனை செல்லும் போது கவனிக்க வேண்டியவை:
சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் முதல்நாள் முதல் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பப்படும் நாளிலிருந்து ஐந்து நாட்களுக்கு செய்யப்படும் பரிசோதனைகளுக்கான கட்டணம் மற்றும் இதர செலவினங்களுக்கான தொகையும் இத்திட்டத்தில் வழங்கப்படும்.

இலவச சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன் அந்த மருத்துவம்னையில் காப்பீடுத் திட்ட அலுவலரைச் சந்தித்து மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் ஒரே சிகிச்சைக்கே வெவ்வேறு மருத்துவமனைகளில் வெவ்வேறு கட்டணங்கள் பெறப்படுவதுண்டு.

ஆன்லைனில் தெரிந்துகொள்ள:
உறுப்பினர் விண்ணப்பப் படிவத்தைப் பெற இந்த இணைப்பில் செல்லவும்.https://docs.google.com/file/d/1VpMQHGnbQywYPlAxYoW8AFec27t6s6sUNMj
AIJdGJUtzluRhC2G9KqJl5aMS/edit

கிராம நிர்வாக அலுவலரிடம் வாங்க வேண்டிய சான்றின் மாதிரிப் படிவத்தைக் காண இந்த இணைப்பில் செல்லவும். https://docs.google.com/file/d/1oiaOxsjjbSfT3CFsMrR5AgnK6x8jvSGE4bNiGlYX9l
EUJH5Do8cP9JL6WL4J/edit

உங்கள் ஊரின் எந்த மருத்துவமனையில் இந்த வசதிகளைப் பெறலாம் என்பதைத் தெரிந்துகொள்ள இங்கு செல்லவும். https://docs.google.com/file/d/1yOaTDA5h-NrGk_-uJazqLgFkXvViHqJmZaFKeRn9v8mm9ZTsrEKq UNPVCCwv/edit

மேலதிக விவரங்களுக்கு:
இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்வதற்கும், மேற்கொண்டு விவரங்களைப் பெறவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

http://www.cmchistn.com/ இத்தளத்திற்கு செல்லலாம்.

1800 425 3993 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive