NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு- அமைச்சசர் அறிவிப்பு

     சென்னை:'ஜவகர் சிறுவர் மன்ற பகுதிநேர கலை ஆசிரியர்கள் மற்றும் திட்ட அலுவலர்களுக்கு வழங்கப்படும், மாத தொகுப்பூதியம், உயர்த்தி வழங்கப்படும்' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணி அறிவித்தார்.கலை பண்பாட்டுத் துறை சார்பில், சட்டசபையில் அமைச் சர் வெளியிட்ட அறிவிப்புகள்:● சென்னையில் உள்ள, ஜவகர் சிறுவர் மன்றங்களில் பணியாற்றும், பகுதிநேரக் கலை ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம், 2,000 ரூபாயில் இருந்து, 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
 
● மாவட்ட மற்றும் விரிவாக்க மன்றங்களில் பணியாற்றும், பகுதிநேர கலை ஆசிரியர்கள் மற்றும் திட்ட அலுவலர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம், 1,500 ரூபாயில் இருந்து, 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
● ஊரக ஜவகர் சிறுவர் மன்றங்களில் பணியாற்றும், பகுதிநேர கலை ஆசிரியர்கள் மற்றும் திட்ட அலுவலர் தொகுப்பூதியம், 1,000 ரூபாயில் இருந்து, 2,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
● நடப்பு நிதியாண்டில், கூடுதலாக, 500 நலிந்த கலைஞர்களுக்கு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம், நிதியுதவி வழங்க, 90 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்.
● மகாபாரதம், ராமாயணம், பாகவதம் போன்றவற்றில் இருந்து, ஏதேனும் ஒன்றை மையப் பொருளாக வைத்து, 'வர்ண களஞ்சியம்' என்ற தலைப்பில், கலைவிழா நடத்த, 15 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்.
● தோற்பாவைக் கூத்து, பொம்மலாட்ட கலைஞர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் வாழ்க்கைத்தரம் முன்னேற்றம் அடையவும், அக்கலைகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, பயிற்சி அளிக்கவும், பயிற்சி அளிப்போருக்கு மதிப்பூதியம், பயிற்சி பெறுவோருக்கு நிதியுதவி, பொம்மைகள், தோல் பொம்மைகள், போன்ற கலைப்பொருட்கள் வாங்க, 15 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்.
● கலைகள் சார்ந்த, தகுதியுள்ள நுால்களை பதிப்பிக்க, நுாலாசிரியர்களுக்கு நிதியுதவி, நுால் ஒன்றுக்கு, 2 லட்சம் ரூபாய் வீதம், ஐந்து நுால்களுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive