NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது?

             பிளஸ் 2 தேர்வு முடிவு தேதி வெளியாவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
 
              பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 1-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 6,550 பள்ளிகளைச் சேர்ந்த 3 லட்சத்து 91 ஆயிரத்து 806 மாணவர்களும், 4 லட்சத்து 47 ஆயிரத்து 891 மாணவிகளும் தேர்வு எழுதியுள்ளனர்.


விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி நிறைவு பெற்றது.இதைத் தொடர்ந்து மாணவர்களின் மதிப்பெண்களை "பார் கோடு' மூலம் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியும், மதிப்பெண்களை தொகுக்கும் பணியும், டிஜிட்டல் சான்றிதழ் தயாரிக்கும் பணியும் முடிவடைந்துள்ளது.பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் தொடங்கியவுடன், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் தேதி தேதி அறிவிக்கப்பட்டு விடும்.இந்த ஆண்டு மே மாதம் தொடங்கியும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.இந்த நிலையில், தேசிய தகுதி காண் மருத்துவ நுழைவுத் தேர்வு குறித்த விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மீண்டும் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, பிளஸ் 2 தேர்வு முடிவு தேதி குறித்த அறிவிப்பு வியாழக்கிழமை இரவு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 8 அல்லது 9-ஆம் தேதியில் வெளியிடப்படலாம். கல்வித் துறை உயர் அதிகாரிகள் ஒப்புதல் அளித்தவுடன், தேதி அறிவிக்கப்படும் என்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive