NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

‘பூத் சிலிப்’ இன்று முதல் வினியோகம் வாக்குச்சாவடி அதிகாரி வீடு, வீடாக வந்து வழங்குவார்.

        தமிழக சட்டசபைக்கு வருகிற 16-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.அனல் பறக்கும் பிரசாரம்மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் 3,794 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 

                முதல்-அமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிகபட்சமாக 45 பேர் போட்டியிடுகிறார்கள். குறைந்தபட்சமாக ஆற்காடு, மயிலாடுதுறை, கூடலூர் ஆகிய தொகுதிகளில் தலா 8 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.வாக்குப்பதிவுக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். வேட்பாளர்கள் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள்.தேர்தல் கமிஷன் ஏற்பாடுகள்வாக்குப்பதிவை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் மும்முரமாக செய்து வருகிறது. துணை தேர்தல் கமிஷனர் உமேஷ் சின்ஹா நேற்று முன்தினம் சென்னை வந்து, தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வெளிமாநிலங்களில் இருந்து துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் உள்ள 65 ஆயிரத்து 616 வாக்குச்சாவடிகளில் 9,630 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு உள்ளன. சென்னையில் மட்டும் 406 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என கண்டறியப்பட்டு இருக்கிறது.பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவார்கள்.வாக்குப்பதிவு எந்திரங்கள்அதிகபட்சமாக 15 வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் ஓட்டுப்பதிவுக்கு ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படும். 15 முதல் 30 வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் 2 எந்திரங்கள் பயன்படுத்தப்படும். முதல்-அமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகரில் 45 வேட்பாளர்களும், அரவக்குறிச்சியில் 36 வேட்பாளர்களும் களத்தில் இருப்பதால் அந்த தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 3 எந்திரங்கள் வைக்கப்படும்.ஓட்டுப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் மற்றும் புகைப்படங்களை பொருத்தும் பணி நேற்று தொடங்கியது. வேட்பாளர்களின் பெயர், சின்னத்துடன், இந்த தடவை முதல் முறையாக வேட்பாளர்களின் புகைப்படங்கள் ஒட்டப்படுகின்றன.வாக்காளர்களுக்கு ‘பூத் சிலிப்’வாக்காளர்களுக்கான ‘பூத் சிலிப்’ வழங்குவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்து உள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) முதல் ‘பூத் சிலிப்’ வழங்கப்படுகிறது. இந்த பூத் சிலிப்புகள் வாக்குச்சாவடி அலுவலரால் வீடு, வீடாக சென்று வழங்கப்படும். இதற்கான கால அட்டவணை அந்தந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் (கலெக்டர்) தயாரிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து சென்னை மாநகராட்சி தேர்தல் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-அரசியல் கட்சி முகவர்கள்இந்திய தேர்தல் கமிஷன் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவின்படி வாக்காளர்களுக்கு வியாழக்கிழமை (இன்று) முதல் ‘பூத் சிலிப்’ வினியோகிக்கப்படும். ‘பூத் சிலிப்’புகள் வாக்குச்சாவடி அலுவலரால் வீடு, வீடாக சென்று வழங்கப்படும். வாக்காளர்கள் அதனை பெற்றுக்கொண்டு ஒப்புகை அளிக்க வேண்டும். அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலரால் கால அட்டவணை தயாரிக்கப்பட்டு அதன்படி ‘பூத் சிலிப்’ வினியோகிக்கப்படும். கால அட்டவணை தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு தெரிவிக்கப்படும்.ஆய்வு செய்ய உத்தரவு இந்த பணிகளை அரசியல் கட்சிகளின் முகவர்கள் பார்வையிடலாம். இந்த பணிகளை ஆய்வு செய்ய மேல்நிலை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பான புகார்களை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் ஆகியோருக்கு அனுப்பலாம். புகார்களின் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த பணிக்கான சேவை மையங்கள் ஆங்காங்கே அமைக்கப்படும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.ஓட்டு எண்ணிக்கை சென்னை நகர தொகுதிகளின் வாக்குகள் லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி, கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 இடங்களில் எண்ணப்படுகின்றன. அதற்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive