NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

FLASH NEWS : CPS ரத்து செய்யப்படும் - ஊதிய முரண்பாடு களையப்படும் - பள்ளிகளில் மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி - அ.தி.மு.க தேர்தல் அறிக்கை

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பரப்புரைக் கூட்டத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை, அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டார்.
அதன் முதல்பிரதியை நாடாளுமன்ற துணை சாபநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை பெற்றுக்கொண்டார்.
தமிழகம், புதுச்சேரி ஆகிய 2 மாநிலங்களுக்கும் தனித்தனியான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 
அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்
* கூட்டுறவு வங்கிகளுக்கு விவசாயிகள் வழங்கவேண்டிய பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்
* தமிழகத்தில் பூரண மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்
* அரசு கேபிள் டிவி சேவையைப் பயன்படுத்தும் அனைவருக்கும் விலையில்லா செட் ஆப் பாக்ஸ்
* தமிழகத்தின் அனைத்து குடும்ப அட்டைதரார்களுக்கும் விலையில்லா கைபேசி
* தாலிக்கு ஒரு சவரன் தங்கம் வழங்க நடவடிக்கை
* மகளிருக்கு பயிற்சியுடன் ஆட்டோ வாங்க மானியம்
* பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி
* தமிழகத்தில் ஓடும் ஆறுகளை இணைக்க நடவடிக்கை
* 2016-2021 ஆண்டுகளில் ரூ.40 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்படும்
* விவசாயிகளுக்கு முழுவட்டி மானியம் தொடர்ந்து வழங்கப்படும்
* மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க 50 சதவீதம் மானியம்
* பொங்கல் திருநாளுக்கு ரூ.500 மதிப்புள்ள ஆப்டெக்ஸ் கூப்பன்
* ஏழை எளிய மக்களுக்கு அரசின் அனைத்து சேவைகளையும் பெற அம்மா வங்கி அட்டை வழங்கப்படும்
*காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு முழுவதுமாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை
* மீனவர் நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும்
* மீனவர்களுக்கு தனி வீடு, மீனவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க நடவடிக்கை
* மீன்பதன பூங்காக்கள் தொடர்ந்து அமைக்கப்படும்
* சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படாது
* வணிகர் நலன் தொகுப்பு நிதி ரூ.10 கோடியாக உயர்த்தப்படும்
* பத்திரப்பதிவு எளிமைப்படுத்தப்படும்
*மகப்பேறு உதவித் தொகை ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும்
* முல்லைப் பெரியாறு அணி 152 அடியாக உயர்த்தப்படும்
* மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினியுடன் கட்டணமில்லா இணைய சேவை
* நூறு யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தினால் கட்டணமில்லை
* வீட்டில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு




5 Comments:

  1. Cps ரத்து செய்யப்படும் போன தேர்தல் அறிக்கையில் சொன்னாங்களே அதை செஞ்சாங்களா இதுல வேற சொல்லாததையும் செஞ்ச வேற டயலாக் என்னமா இப்படி பண்றீங்களே

    ReplyDelete
  2. மத்தியஅரசு cps கொண்டு வரும் முன்பே 2004 ஏப்ரலில் மாநில அரசு ஊழியர்களுக்கும் நடைமுறையில் கொண்டு வந்தது அம்மா...
    2011 ல் திருச்சி பிரச்சாரம் 6வது ஊதியக்குழு முரண்பாடு களையப்படும் என பேச்சு...
    ஆசிரியர் சமுதாயம் சிந்தித்து செயல்படும்...7 நாள் தொடர் உண்ணாவிரதம் பேச்சுவார்த்தை நடத்த கல்வித்துறை அமைச்சர். ..முயற்சி. .. 00 செய்யவில்லை...

    ReplyDelete
  3. மத்தியஅரசு cps கொண்டு வரும் முன்பே 2004 ஏப்ரலில் மாநில அரசு ஊழியர்களுக்கும் நடைமுறையில் கொண்டு வந்தது அம்மா...
    2011 ல் திருச்சி பிரச்சாரம் 6வது ஊதியக்குழு முரண்பாடு களையப்படும் என பேச்சு...
    ஆசிரியர் சமுதாயம் சிந்தித்து செயல்படும்...7 நாள் தொடர் உண்ணாவிரதம் பேச்சுவார்த்தை நடத்த கல்வித்துறை அமைச்சர். ..முயற்சி. .. 00 செய்யவில்லை...

    ReplyDelete
  4. CPS ரத்து என்பது 2011 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கை சொன்னாங்க? இப்ப சொல்லர செய்தி எல்லாம் ஏமாற்று வேலை.

    ReplyDelete
  5. கேக்கறவன் கேனையனா இருந்தா இதுவும் சொல்லுவாங்க இன்னமும் சொல்லுவாங்க.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive