Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் பட்டியல் வெளியிடப்படுமா

         இன்று துவங்கும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், 1.30 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். 
 
         கவுன்சிலிங்கில் விருப்ப பாடங்கள் மற்றும் கல்லுாரிகளை தேர்வு செய்ய, எளிதாக கல்லுாரிகளின் தேர்ச்சி சதவீத பட்டியலை அண்ணா பல்கலை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அதேபோல, கல்லுாரிகளின் கட்டண விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.வரும் கல்வி ஆண்டில் இன்ஜி., கல்லுாரிகளுக்கான இணைப்பு அங்கீகார அந்தஸ்து, கடந்த வாரம் வழங்கப்பட்ட நிலையில், எந்தெந்த கல்லுாரிகள் இணைப்பு பெற்றன; எந்தெந்த கல்லுாரிகள் இணைப்பு பெறவில்லை; எந்த கல்லுாரிகள் புதிதாக சேர்ந்தன என்பன போன்ற விவரங்களை, அண்ணா பல்கலை இதுவரை வெளியிடவில்லை.
மாறாக இணையதளத்தில், கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட கல்லுாரிகள் மற்றும் இடங்களின் எண்ணிக்கை மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பெற்றோரும், மாணவர்களும் ஏமாறாமல் தடுக்க, அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளின் பட்டியலை இணையதளத்தில் வெளியிட பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Total Pageviews

Most Reading