NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மின் வாரிய வேலைக்கு பண வசூல் 'ஜோர்' :அலட்சியத்தால் பட்டதாரிகள் ஏமாறும் அபாயம்.

          தமிழ்நாடு மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, சிலர் பணம் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
          தமிழ்நாடு மின் வாரியம், 250 இளநிலை உதவியாளர் - கணக்கு;25 ஸ்டெனோ; 100 'லேப் டெஸ்டர்;' 900 களப்பணி உதவியாளர்; 100 இளநிலை உதவியாளர் - நிர்வாகம்; 500 தொழில்நுட்ப உதவியாளர் - எலக்ட்ரிக்கல்; 25 தொழில்நுட்ப உதவியாளர் - மெக்கானிக்கல் என, காலி பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது.
இதற்கான எழுத்து தேர்வு, ஆக., 27, 28ம் தேதிகளில் நடக்கிறது.

ஏமாற வேண்டாம்

இந்நிலையில், வேலை வாங்கி தருவதாக கூறி, பட்டதாரிகளிடம் சிலர் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மின் வாரியம் சார்பில், 17ம் தேதி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.அதில், 'மின் வாரிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு, அண்ணாபல்கலைக்கழகம் மூலம் நடத்தப்படுகிறது. தேர்ச்சி பெறுவோருக்கு, தகுதி அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் வழங்கப்படும். இடைத்தரகர்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்' என, தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அந்தஅறிவிப்பையும் மீறி, அ.தி.மு.க., தொழிற்சங்கத்தின் பெயரை கூறி, சிலர் பணம் வசூல் செய்வதாக கூறப்படுகிறது. சென்னை, தேனாம்பேட்டை, வி.வி.கோவில்தெருவில், தமிழ்நாடு மின் வாரிய அண்ணா பொது தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் ஒரு அலுவலகம் உள்ளது.அங்கு உள்ள நபர்கள், 'மின் வாரியத்தில், டைப்பிஸ்ட், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறது; எங்களிடம், பதிவு செய்ய, 500 ரூபாய்; 1,000 ரூபாய் வைப்பு நிதி செலுத்தினால், உரிய வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்' எனக்கூறி, பலரிடமும் பணம் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, சங்கத்தை நடத்தி வரும் கதிரேசன் என்பவரிடம் கேட்ட போது, ''எங்கள் தொழிற்சங்கம், அரசால் அங்கீகரிக்கப்பட்ட சங்கம். இங்கு வேலை வாங்கி தருவதாக மோசடி நடக்கவில்லை. சிலர், தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்,'' என, கூறினார்.

ரூ.10 லட்சம் வரை

அண்ணா தொழிற்சங்க தலைவர்தாடி.ம.ராசு கூறியதாவது: சென்னை,அண்ணா சாலையில் உள்ள, மின் வாரிய தலைமை அலுவலகத்தில் தான், தமிழ்நாடு மின் வாரிய அண்ணா பொது தொழிலாளர் சங்கம்உள்ளது. இதன் தலைவராக சம்பத்தும், செயலராக விஜயரங்கனும் செயல்பட்டு வருகின்றனர். அதே தொழிற்சங்க பெயரில், தேனாம்பேட்டையில் செயல்பட்டு வருவது போலியானது. அந்த அமைப்பின் தலைவர் என்று கூறும் கதிரேசன், எந்தபதவியிலும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து பட்டதாரிகள் கூறியதாவது:'மின் வாரியம், எழுத்துத் தேர்வுநடத்தினாலும், பணம் கொடுக்கும் நபர்களுக்கு தான், நேர்முக தேர்வில் அதிக மதிப்பெண் வழங்கி, வேலை வழங்கப்படும்' என, சிலர் கூறுகின்றனர். ஒருவருக்கு வேலை வாங்கி தர, 10 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டு, மூன்று லட்சம் ரூபாய் முன் பணம் தரும்படி கூறி வருகின்றனர்.'வேலைக்கு யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்' என, மின் வாரியம் அறிவித்ததோடு சரி. ஆனால், பணம் வசூலித்தால்யாரிடம் புகார் தெரிவிக்க வேண்டும் என, கூறவில்லை. இதனால், மின் வாரிய அறிவிப்பு, கண் துடைப்பா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive