NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பணி நிரந்தரம் கோரி பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஜூலை 22இல் பேரணி

        பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி இம்மாதம் 22இல் சென்னையில் பேரணி நடத்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் அமைப்பின் மாநில பொருளாளர் திரிபுரசெல்வம் தலைமையில் நடைபெற்றது.

மாவட்டச் செயலர் தமிழ்ச்செல்வி, பொருளாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர்கள் தங்கராஜ், ஜேசுராஜ், துணைச் செயலர்கள் செந்தில்குமார், கண்ணன், கல்வி மாவட்டப் பொறுப்பாளர்கள் கோலப்பன், ராஜ்குமார், ரஹ்மத், கண்காணிப்புக் குழுத் தலைவர்கள் மகேஸ்வரி, முத்துமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மே மாதம் ஊதியம் வழங்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஜூலை 22இல் சென்னையில் பேரணி நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




4 Comments:

  1. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வாழ்த்துகள்

    ReplyDelete
  3. நம் வாழ்க்கை நம் கையில்.

    ReplyDelete
  4. ஒற்றுமையே வலிமை. நம்மில் பலருக்கு ஒரே ஒரு எண்ணம் ? யாரோ ஒருத்தன் கொடி பிடிப்பான் அவன் என்ன என்ன சொல்ல வர்ரான்னு பார்த்துட்டே இருப்பான். கடைசியில ஓடி ஓடி கத்தி கத்தி போராட்டங்கள் எங்கு நடந்தாலும் அதில் மறக்காமல் பங்கெடுத்துக் கொண்ட எவனும் நாளைக்கு திடீரென நமது அரசு உங்கள் அனைவருக்கும் பணி வழங்குவது கடிணம் ? ஆகவே சுமார் 1000 பேரையாவது தற்போது பணி நிரந்தரம் செய்வதாக கூறினால் ??? உடனே இங்குள்ள அனைவருக்கும் ஒரே சந்தோஷமாக இருக்கும் ? ஆனால் இங்குள்ளவர்கள் யாருக்கும் வேலை கிடைக்க வாய்ப்பில்லை ? காரணம் ? நாம் கொடி பிடிக்கறத பார்த்துட்டு வீட்டுல ஜம்முணு தூங்கினு இருந்தவன் எழுந்து ஓடோடி போய் நாம் வீடு போய் சேர்வதற்க்குள் ? அவன் அப்பாயின்ட்மெண்ட் ஆர்டரோட நமக்கு முன்ன நிற்ப்பான். ஆகவே நமக்கு நா(ம)மே தான் கடைசி வரை.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive