NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு முடிவடைந்தது: 44 சதவீத இடங்களே நிரம்பியுள்ளன- ஒரு லட்சம் இடங்கள் நிரம்பவில்லை

         பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு நேற்று முடிவடைந்த நிலையில், பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 44 சதவீத இடங்களே நிரம்பியுள்ளன. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.தமிழகத்தில் மொத்தம் 523 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.

இந்த ஆண்டு பிஇ, பிடெக் படிப்புகளில் ஒரு லட்சத்து 92 ஆயிரம் இடங்களை கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்ப அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்தது. அரசு ஒதுக்கீட்டின் கீழ்வரும் இந்த இடங்களில் சேர ஒரு லட்சத்து 34 ஆயிரம் மாணவர்களே விண்ணப்பித்தனர். ஒட்டுமொத்த கலந்தாய்வில் 84 ஆயிரத்து 352 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 648 இடங்கள் காலியாக உள்ளன.கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் ஏற்பட்டுள்ளது குறித்து ஈரோடு கல்வியாளர்பேராசிரியர் மூர்த்தி செல்வகுமரன் கூறியதாவது:கடந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டுக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் இடங்கள் இருந்தன. ஒரு லட்சம் இடங்கள் நிரம்பிய நிலையில் எஞ்சிய ஒரு லட்சம் இடங்கள் காலியாக கிடந்தன. இந்த ஆண்டு மொத்தமுள்ள ஒரு லட்சத்து 92 ஆயிரம் இடங்களில் 84 ஆயிரத்து 352 இடங்களே நிரம்பியுள்ளன.

அதாவது, மொத்த இடங்களில் ஏறத்தாழ 44 சதவீத இடங்களே நிரம்பியுள்ளன. பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் ஏற்கெனவே பொறியியல் படித்து முடித்த பலர் வேலையில்லாமல் இருப்பதுதான். முன்பு இருந்த அளவுக்கு வேலைவாய்ப்பு இல்லை. ஆனால், இந்தஆண்டு பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் அதிகமாகவே இருந்தன. இருப்பினும், என்ன காரணத்தினாலோ இதன் தாக்கம் கலந்தாய்வில் எதிரொலிக்க வில்லை.இவ்வாறு அவர் கூறினார்.கடந்த ஜூன் 27-ம் தேதி தொடங்கிய பொது கலந்தாய்வு நேற்றுடன் முடிவடைந்தது. பொது கலந்தாய்வை தொடர்ந்து அடுத்த கட்டமாக தொழிற்கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வு23, 24-ம் தேதிகளில் (சனி, ஞாயிறு) நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive