NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

BE துணை கவுன்சிலிங் வரும், 28ல் நடக்கிறது. இதற்கு, 27ல் விண்ணப்பிக்க வேண்டும்.

      தமிழக இன்ஜினியரிங் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 1.06 லட்சம் இடங்களை நிரப்புவதற்கான, துணை கவுன்சிலிங் வரும், 28ல் நடக்கிறது. இதற்கு, 27ல் விண்ணப்பிக்க வேண்டும்.

          தமிழக இன்ஜி., கல்லுாரிகளில் மாணவர்கள் சேருவதற்கான, பொது கவுன்சிலிங், 21ல் முடிந்தது. இதன்முடிவில், 84 ஆயிரத்து, 352 இடங்களே நிரம்பின. ஒரு லட்சத்து, 1,318 இடங்கள் காலியாக உள்ளன.

ஆன்லைனில்... : இதேபோல, ஜூன், 23, 24ம் தேதிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடந்தது. இதில், 1,501 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன; மேலும், 5,022 இடங்கள் காலியாக உள்ளன. இதன்படி, மொத்தம் ஒரு லட்சத்து, 6,340 இடங்கள் காலியாக உள்ளன.

இந்த இடங்களை நிரப்புவதற்கான துணை கவுன்சிலிங், ஜூலை, 28ல் நடக்கிறது. இதில் பங்கேற்க, 27ம் தேதி காலை, 9:00 மணி முதல், 5:30 மணி வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

அறிவுறுத்தல் : பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும், ஏற்கனவே கவுன்சிலிங்கில் பங்கேற்று, இட ஒதுக்கீடு பெற்றவர்களும் இந்த கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு இன்ஜி., கவுன்சிலிங் செயலர் இந்துமதி அறிவித்துள்ளார். கூடுதல் விவரங்களை, https://www.annauniv.edu/tnea2016/ என்ற, இணைய தளத்தில் காணலாம்.

அருந்ததியர் ஒதுக்கீட்டுக்கு 29ல் நடக்கிறது : கடந்த ஜூன், 23ல் துவங்கி, இம்மாதம், 21ம் தேதியுடன் முடிவடைந்த, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், அருந்ததியருக்கான ஒதுக்கீட்டில், 4,762 இடங்களும், தொழிற்கல்விக்கான கவுன்சிலிங்கில், 189 இடங்களும் காலியாக உள்ளன. இந்த இடங்களை, ஆதிதிராவிடர் எனப்படும், பட்டியலின தலித் மாணவர்களுக்கு நிரப்புவதற்கான கவுன்சிலிங், 29ல் நடக்கிறது. கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்து பாடம் எடுக்காதோர், விண்ணப்பித்து வேறு பாடப்பிரிவுகளில் ஒதுக்கீட்டு பெற்றோரும், நேரில் இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்று, விருப்பமான கல்லுாரிகளில், முக்கிய பாடப்பிரிவுகளில் இடம் இருந்தால் எடுத்து
கொள்ளலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive