NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆயிரம் பள்ளிகளுக்கு செல்லும் விவேகானந்தர் ரதயாத்திரை சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது

மாணவர்களிடம் நற்குணங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விவேகானந்தர் ரதயாத்திரை சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. வருகிற 4–ந்தேதி வரை ஆயிரம் பள்ளிகளுக்கு இந்த ரதங்கள் செல்கின்றன.

விவேகானந்தர் ரதயாத்திரை
பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளை சார்பில் நடைபெற இருக்கும் 8–வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக, சுவாமி விவேகானந்தர் ரதயாத்திரையின் பயணத் தொடக்க விழா சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகில் நேற்று நடந்தது. இதற்காக கிழக்கு மாடவீதியில் விவேகானந்தர் சிலையுடன் 25 ரதங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தன.
கோசைநகரான் திருகயிலாய திருகூட்டத்தினர் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வாத்தியங்கள் மூலம் இசை நிகழ்ச்சி நடத்தினர். தொடர்ந்து சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் மேலாளர் சுவாமி விமூர்த்தானந்தா மகராஜ், தீபாராதனை காண்பித்து ரத யாத்திரையைத் தொடங்கி வைத்தார். விழாவில் ஆடிட்டர் எஸ்.குரூமூர்த்தி, நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதுபற்றி இந்து ஆன்மிக மற்றும் சேவை மைய துணைத்தலைவர் ராஜலட்சுமி கூறியதாவது:–
ஆயிரம் பள்ளிகள்
வனம் மற்றும் வனவிலங்குகளை பாதுகாத்தல், உயிரினங்களைப் பேணுதல், சுற்றுச் சூழலைப் பராமரித்தல், பெற்றோர், ஆசிரியர் மற்றும் பெரியோர்களை வணங்குதல், பெண்மையைப் போற்றுதல், நாட்டுப்பற்றை உணர்த்துதல் ஆகிய 6 நற்குணங்களை மாணவர்களுக்கு எடுத்துரைப்பதற்காக ஆண்டுதோறும் விவேகானந்தர் ரதயாத்திரை நடத்தப்படுகிறது.
இன்று (நேற்று) இரவு புறப்படும் இந்த ரதங்கள் வருகிற 4–ந்தேதி வரை சென்னை மாநகர், புறநகர் மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சென்று, அங்குள்ள மாணவர்களுக்கு நற்குணங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
வருகிற 2–ந்தேதி முதல் 8–ந்தேதி வரை சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் நடைபெற இருக்கும் இந்து ஆன்மிக கண்காட்சியை சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive