NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இணையதள குற்றங்களை தடுக்க பாடம் ஒன்று: 'சைபர்'! மாணவ, மாணவியருக்கு போலீஸ் வகுப்பு

          கோவையில் பிரபல கல்லுாரியில் படிக்கும், திஷாவின் சமீபகால நடவடிக்கைகளில், அவளது தாயாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இரவு வெகுநேரம் கண் விழித்து, மொபைல் போனை பயன்படுத்திக் கொண்டிருந்த மகளை தொடர்ந்து கண்காணித்ததில், ஏதோ பிரச்னையில் சிக்கியிருந்தது தெரிந்தது. 
 
இணையதளம் வாயிலாக அவளை மிரட்டி வந்த கயவனை, திஷாவின் தோழிகளின் உதவியுடன் கண்டுபிடித்து மீட்டது தனிக்கதை.- திஷா போன்ற கல்லுாரி மாணவிகளுக்கு இணையதளம், சமூக வலைதளங்களின் பயன்பாடுகள் குறித்து, பாடம் நடத்த, கோவை போலீசார்
திட்டமிட்டுள்ளனர். பெற்றோர் மற்றும் கல்லுாரி நிர்வாகத்தினருடன் சேர்ந்து, இதற்கென குழு அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளனர்.
சென்னை, 'சாப்ட்வேர்' இன்ஜினியர் சுவாதி படுகொலை, சேலத்தை சேர்ந்த பட்டதாரி பெண் வினுப்ரியா தற்கொலை என, தமிழகத்தை உலுக்கிய, இரண்டு அடுத்தடுத்த
சம்பவங்கள், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவங்களுக்கு சமூகவலைதளங்கள்தான் அடிப்படை காரணமாக உள்ளன.
இதனால், சமூக வலைதளங்கள், கவலை தரும் தளங்களாக மாறியுள்ளன. குறிப்பாக, பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவியர், இளம்பெண்கள் சமூகவலைதளங்களில் சிக்கி, பிரச்னைகளை சந்திக்கின்றனர். 'பேஸ்புக்'கில் பெண்கள் மற்றும் குடும்பத்தினரின் புகைப்படங்களை பதிவு செய்வது, தெரியாத நபர்களின் புகைப்படங்களுக்கு, 'லைக்' மற்றும் கருத்து தெரிவிப்பது, தெரியாத நபர்களிடம் 'சாட்' செய்வது என, பிரச்னைகளை தாங்களாகவே இழுத்துப் போட்டுக் கொள்கின்றனர்.பின், இவை பூதாகரமாக மாறி, தற்கொலை மற்றும் கொலை செய்யும் அளவுக்கு செல்கிறது. இதுபோன்ற பிரச்னைகளை தவிர்த்து, முன்னெச்சரிக்கை நட
வடிக்கைகளை மேற்கொள்ள, கோவை மாநகர போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக,
கல்லுாரி மற்றும் பள்ளி மாணவ, மாணவி
களுக்கு 'சைபர்' பாடம் நடத்த, போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ்
கூறியதாவது:
கோவை மாநகரில் உள்ள கல்லுாரிகளில், மாணவர் பிரதிநிதி, கல்லுாரி நிர்வாகத்தினர் மற்றும் போலீசாருடன் இணைந்து, 'ராகிங்' தடுப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதே போல் சமூக வலைதளங்கள், இணையதளங்களை பயன்படுத்துவது குறித்தும், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ., தலைமையிலான போலீசார், கல்லுாரி நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோருடன் இணைந்து, மாணவ, மாணவிகளுக்கு, 'சைபர்' குற்றங்கள் குறித்தும், அவற்றில் சிக்காமல் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்குவர்.
இதற்காக, வாரந்தோறும் பள்ளி, கல்லுாரிகளில், விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும். போலீசார் - மாணவர் இடையே, நல்லுறவு ஏற்படுத்தப்பட்டு, அதன் வாயிலாக, 'சைபர்' குற்ற சம்பவங்களை தடுக்க, நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் விழிப்புணர்வு முகாம்கள் ஏற்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
பெற்றோரிடம் மறைக்காதீர்!
பெண் போலீசார் சிலர் கூறுகையில்,
'சமூகவலைதளங்கள் வாயிலாக பிரச்னைகளில் சிக்கும் பெண்கள், அது குறித்து தங்கள் பெற்றோரிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும். பெற்றோரிடம் பிரச்னைகள் குறித்து, தெரிவிக்காமல், மறைப்பதுதான் விபரீதத்தின் ஆரம்பம். பெற்றோரிடம் தெரிவிக்க பயப்படும் பெண்கள், பெண் போலீசாரை நண்பர்களாக அணுகி தெரிவிக்கலாம். அவர்களது தகவல்கள்
ரகசியமாக வைக்கப்பட்டு, தேவையான
உதவிகள் செய்யப்படும்' என்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive