Printfriendly

www.Padasalai.Net

Padasalai

Menu (Please wait for Full Loading)

பாட புத்தகங்கள் வினியோகத்தில் தாமதம் - அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிரமம்

ஊட்டி: கல்வியாண்டு துவங்கி, ஒரு மாதம் முடிந்தும், பல அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் வந்து சேராததால், மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
            நடப்பு கல்வியாண்டு துவங்கி, ஒரு மாதம் முடிந்துவிட்ட நிலையில், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து, வகுப்புகள் துவங்கிவிட்டன. இருப்பினும், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசு, ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பெரும்பாலான பள்ளிகளில், 'சிலபஸ்' முடிக்கும் நோக்கில், பாடங்கள் வேகமாக போதிக்கப்பட்டு, மாணவ, மாணவியருக்கு 'ஹோம்வர்க்' வழங்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், சில அரசுப்பள்ளிகள் மற்றும் பல உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, அரசின் இலவச பாட புத்தகங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால், பாடங்களை போதிக்க முடியாத நிலையில், ஆசிரியர்களும், கற்றுக்கொள்ள முடியாத நிலையில் மாணவர்களும் உள்ளனர்.
நடப்பாண்டு, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என, கல்வித் துறையினர் அறிவுறுத்தியுள்ள நிலையில், பல பள்ளிகளில், குறிப்பிட்ட வகுப்புகளுக்கு இதுவரை பாட புத்தகங்கள் வந்து சேராதது, ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர்கள் சிலர் கூறுகையில்,'புத்தகங்கள் இல்லாததால் எங்கள் பிள்ளைகள் படிப்பதில்லை; இனி, புத்தகம் கொடுக்கவில்லை என்ற காரணத்தை கூறி விடுகின்றனர். விரைவில் புத்தகங்களை கொடுக்க பள்ளிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தியிடம் கேட்டபோது,“பாட புத்தகங்கள் முறையாக வழங்கப்பட்டு வருகின்றன. சில அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு செல்வதில் தாமதம் ஏற்படுவதாக வந்த புகார் குறித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,”என்றார்.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Blogger news

Blogroll

Total Pageviews

Most Reading