NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விரிவுரையாளர் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம் விநியோகம்

இளம் விரிவுரையாளர் தேர்வுக்குரிய விண்ணப்பத்தை மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை முதல் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோஇருதயசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் காலியாக உள்ள முதுநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், இளம் நிலை விரிவுரையாளர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படவுள்ளன. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை முதல் ஜூலை 30 ஆம் தேதி வரை வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் விற்பனை செய்யப்படும். விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஜூலை 30 ஆம் தேதிக்குள் மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திலே அளிக்கவேண்டும். விண்ணப்பம் அளித்ததற்கான ஒப்புதல் சீட்டையும் விண்ணப்பதாரர் பெற்றுச்செல்லவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.




1 Comments:

  1. Please give some more information or official website link.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive