NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

1008 தமிழாசிரியர்களுக்கு பள்ளி மாணவர்கள் பாத பூஜை.

         இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியை முன்னிட்டு 1008 தமிழாசிரியர்களுக்கு பள்ளி மாணவ மாணவியர் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி சென்னை மீனம்பாக்கத்தில்நேற்று நடந்தது. கண்காட்சியின் 2-வது நாளான நேற்று சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
 
          8-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் கடந்த 2-ம் தேதி மாலை தொடங்கியது. இந்தக் கண்காட்சியை யோகா குரு பாபா ராம்தேவ் தொடங்கி வைத்தார். சுற்றுச்சூழலை பராமரித்தல், பெற்றோர் ஆசிரியர் மற்றும் பெரியோர்களை வணங்குதல், பெண்மையை போற்றுதல், எல்லா ஜீவராசிகளையும் பேணுதல், நாட்டு பற்றை உணர்த்துதல், வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாத்தல் ஆகிய கருத்துகளை வலியுறுத்தி இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. பண்பு மற்றும் கலாச்சார பயிற்சி முனைவு அறக்கட்டளை மற்றும் இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி அமைப்பு நடத்தும், இந்த நிகழ்ச்சி முறையாக நேற்று முன்தினம் தொடங்கியது.

பாத பூஜை

கண்காட்சியின் அம்சங்களில் ஒன்றான பெற்றோர், ஆசிரியர் மற்றும் பெரியோர்களை வணங்கு தலை முன்னிட்டு ஆச்சார்ய வந்தனம் உட்பட பல்வேறு நிகழ் வுகள் நேற்று நடந்தன. இந்த நிகழ்ச்சியின்போது, 1008 தமிழாசி ரியர்களுக்கு மகரிஷி வித்யா மந்திர், மாதா அமிர்தானந்த மயி பள்ளி ஆகியவற்றின் மாணவ, மாணவிகள் பாத பூஜை செய்தனர். ஆசிரியர்களின் கால்களில் மஞ்சள், குங்குமம் தடவி மரியாதை செய்த மாணவ மாணவிகளை மஞ்சள், அரிசி தூவியும், இனிப்பு வழங்கியும் ஆசிரியர்கள் வாழ்த் தினர். இந்த நிகழ்ச்சிக்கு நகரத் தார் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

பாரம்பரிய விளையாட்டுகள்:

பரதநாட்டியம் உட்பட பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நேற்றைய தினம் நடந்தன. திருவருட்பா ஓதுதல் நிகழ்ச்சியை சர்வதேச வள்ளலார் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது. பெற்றோர் களையும், ஆசிரியர்களையும் மரியாதை செய்யும் கருத்தை வலி யுறுத்தி சிலம்பம், களரி, உறியடி உட்பட பல்வேறு பாரம்பரிய விளை யாட்டுப் போட்டிகள் நேற்று நடத்தப்பட்டன.தத்ரூப வள்ளித் திருமணம்உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறு வனத்தின் சன்மார்க்க செம் பொருட்டுணிவு உயராய்வு இருக்கை சார்பில் வள்ளித் திரு மணம் நிகழ்வுக்கு ஏற்பாடு செய் யப்பட்டிருந்தது. இது நாடக வடிவில் இல்லாமல், முருகப் பெரு மானுக்கும், வள்ளி தேவிக்குமான திருமண நிகழ்வாக நடந்தது. 108 கலசங்கள் வைத்து, வேள்வி குண்டம் அமைத்து, தேவாரம், திரு வாசகம், திருப்புகழ், திருவருட்பா, குமாரஸ்தவம் உள்ளிட்ட தமிழ் மறைகள் ஓதப்பட இந்த நிகழ்வு நடந்தது.

50 ஆயிரம் பேர்.

கண்காட்சியில் ஆன் மிக நிறுவனங்கள் அமைத்திருந்த 300 அரங்குகளை நேற்று சுமார் 50 ஆயிரம் பேர் பார்வை யிட்டனர். கண்காட்சியின் முதல் அம்சமான இயற்கையை பேணு தல் சுற்றுச்சூழலை பராமரித்தல் ஆகிய கருத்துகளை வலியுறுத்தி பூமி வந்தனம் மற்றும் கங்கா வந்தனம் நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டன. கண்காட்சியின் 3-வது தினமான இன்று, பெண்மையை போற்றுவதை மையமாகக் கொண்டு, கன்னிகா வந்தனம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்க உள்ளன




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive