NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ்-2 பாடத்திட்டத்தை மாற்றாவிட்டால் ‘நீட்’ தேர்வில் வெற்றிபெறுவது சிரமம் கல்வியாளர்கள் ஆதங்கம்

         பிளஸ்-2 பாடத்திட்டத்தை மாற்றாவிட்டால் ‘நீட்’ தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறுவது சிரமம். இதற்காக சிறப்பு வகுப்புகள் நடத்துவதால் எந்தவித மாற்றமும் வராது என்று கல்வியாளர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ நுழைவுத்தேர்வு

சமீபத்தில் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு, ‘நீட்’ எனப்படும் அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத்தேர்வு ஆகியவை நடத்தப்பட்டன. இந்ததேர்வுகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களில் சி.பி.எஸ்.இ. படித்தவர்கள் ஓரளவு பங்கேற்றனர். மாநில கல்வி திட்டத்தில் படித்தவர்களில் வெகுசிலர் மட்டுமே கலந்துகொண்டனர்.
ஆனால் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அந்த மாநில அரசு பின்பற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டங்களில் படித்த மாணவ-மாணவிகள் அதிக எண்ணிக்கையில் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழக மாநில கல்வி திட்டத்தில் படித்த மாணவர்களும் ‘நீட்’ தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு என்ன செய்யவேண்டும்? என்று கேட்டதற்கு தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில தலைவர் சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது:-

பாடத்திட்டத்தை மாற்றவேண்டும்

தமிழகத்தில் இப்போது நடைமுறையில் உள்ள பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டம் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு தயாரித்தது. இன்றைய சூழ்நிலை, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப உடனடியாக புதிய பாடத்திட்டத்தை தயாரிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பிளஸ்-1 பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதே இல்லை. ஆனால் ‘நீட்’ தேர்வில் பிளஸ்-1 வகுப்பில் இருந்துதான் அதிக கேள்விகள் கேட்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் பெயர் அளவில் தான் பிளஸ்-1 வகுப்புகள் நடத்தப்பட்டு, தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. எனவே பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டத்தை உடனே மாற்றவேண்டும். பாடத்திட்டத்தை மாற்றாதவரை ‘நீட்’ தேர்விலும், ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்விலும் தமிழகத்தை சேர்ந்த மாநில கல்விமுறையில் படித்த மாணவ-மாணவிகள் வெற்றிபெறுவது சிரமம்.

சிறப்பு வகுப்புகள்

பள்ளிக்கல்வி இயக்குனரகம் ‘நீட்’ தேர்வுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தினாலும் வெற்றிபெறுவது சிரமம். சிறப்பு வகுப்புகளால் எந்த மாற்றமும் வராது.
இவ்வாறு சாமி சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதே கருத்தை தமிழக கல்வியாளர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.




3 Comments:

  1. தமிழகத்தில் இப்போது நடைமுறையில் உள்ள பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டம் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு தயாரித்தது. இன்றைய சூழ்நிலை, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப உடனடியாக புதிய பாடத்திட்டத்தை தயாரிக்க வேண்டும். மூன்று வருடங்களுக்கு முன்பே பாடத்திட்டத்தை மாற்ற முயர்ச்சி எடுத்திருக்கவேண்டும்
    பள்ளிக்கல்வி இயக்குனரகம் ‘நீட்’ தேர்வுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தினாலும் வெற்றிபெறுவது சிரமம். சிறப்பு வகுப்புகளால் எந்த மாற்றமும் வராது..கல்வித்துறைக்கு விலையில்லா பொருட்களை வழங்குவதற்குத்தான் நேரம் உள்ளது.மாணவர்நலனில் அக்கரை கிடையாது.

    ReplyDelete
  2. NEET exam-ஐ 2017 ஆம் ஆண்டு அகில இந்திய அளவில் கட்டாயமாக்கினால் அதிகம் பாதிப்படையப் போவது தமிழக மாணவர்கள்தான். ஏனெனில் சமச்சீர்க் கல்வி என்னும் ஒன்றுக்கும் உதவாத ஒரு Syllabus-ஐ வைத்துக் கொண்டு NEET exam-க்கு நம் மாநில மாணவர்களைத் தயார்ப்படுத்துவது என்பது "முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போலாகும்".இதில் Supreme Court-ன் தீர்ப்பு முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது என்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.ஆம், கடந்த 2011 ஆம் ஆண்டு தற்போதைய முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்கள் பதவி ஏற்றவுடன் சமச்சீர்க் கல்வியை மாற்றி மறுபடியும் Matriculation கல்வியைக் கொண்டு வர முயற்சித்தார்.ஆனால், அதற்கு முட்டுக் கட்டையாக முன்னாள் தி.மு.க அரசு (கட்சி) Supreme Court-வரை சென்று, Matriculation Syllabus-ஐ அமுல்படுத்தினால் சாதாரண கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று ஒரு Case-ஐப் போட்டு அதில் வெற்றியும் கண்டு , ஒரு ஒன்றுக்கும் உதவாத syllabus "சமச்சீர்க் கல்வி"ஐக் கொண்டு வந்தது. அப்பொழுது சமச்சீர்க் கல்விக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கிய Supreme Court, இன்று ஒன்றுக்கும் உதவாத சமச்சீர்க் கல்விஐக் கொண்டு, CBSE பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட NEET exam-ஐ கிராமப்புற மாணவர்கள் PASS செய்வார்களா என்று யோசிக்க வேண்டாமா? ஆனால் மாறாக NEET exam வேண்டும் என்று தீர்ப்புக்கூறியுள்ளது.மேலும், தற்பொழுது(2106-2017) +2 படிக்கும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். +2 பாதியில் வந்து NEET exam-ஐ implement பண்ணச் சட்டம் போடும் மத்திய அரசு, இத்தகைய எளிய மாணவர்களால் இந்தக் கடின NEET exam-ஐ எழுத முடியுமா என்று யோசிக்க வேண்டாமா? தமிழக அரசும் வரும் ஆண்டு NEET exam இருக்கிறதா இல்லையா என்று தெளிவாகக் கூறவில்லை.மாணவர்கள் தேர்வுக்குத் தயாராவ்து ஒரு நாளில் அல்ல, ஒரு வருடம் என்பது இந்த அரசாங்கத்துக்குத் தெரியுமா? தெரியாதா? மேலும் MBBS admission-க்கு முழு ஆண்டுத்தேர்வு மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படுமா ? இல்லை NEET exam score மட்டும் கருத்தில் கொள்ளப்படுமா ? அல்லது இரண்டுமா? இரண்டும் என்றால் ஒவ்வொன்றும் எவ்வளவு சதவீதம்?.இது போன்ற கேள்விகளுக்குத் தெளிவான பதில் இல்லை.மேலும், NEET exam வருவதால் சமச்சீர் கல்வி என்ற ஒரு தரம் தாழ்ந்த கல்வி பயின்ற கிராமப்புற, தமிழ் மொழியில் பயின்ற மாணவர்களின் நிலை என்ன ? இப்படிப்பட்ட மாணவர்கள் என்ன Doctor ஆகக் கூடாதா? கிராமப்புற, தமிழ் மொழியில் பயின்ற மாணவர்களுக்கு அறிவு இருக்காதா?ஒரே குழப்பம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை +2 வுக்கு ஒரே syllabus வரும் வரை NEET என்பது சாத்தியமற்றது. இந்த NEET exam-ஐ நடைமுறைப்படுத்த படிப்படியாகப் பண்ண முடியுமே தவிர எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஒரேயடியாகப் பண்ண முடியாது.அதற்குக் குறைந்தது 8 வருடங்களாவது தேவை. ஆம் 2017ல் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவரிடம் இருந்து தொடங்க வேண்டும். கல்வி என்பது இயந்திரம் அல்ல, அது மனநிலையோடு (psyche = mind , psychology) சம்பந்தப்பட்டது என்று இன்றைய ஆட்சியாளர்களும், அதிகாரமும்,சட்டமும் உணரவில்லை என்றே தோணுகிறது.

    ReplyDelete
  3. NEET exam-ஐ 2017 ஆம் ஆண்டு அகில இந்திய அளவில் கட்டாயமாக்கினால் அதிகம் பாதிப்படையப்போவது தமிழக மாணவர்கள்தான். ஏனெனில் சமச்சீர்க் கல்வி என்னும் ஒன்றுக்கும் உதவாத ஒரு Syllabus-ஐ வைத்துக் கொண்டு NEET exam-க்கு நம் மாநில மாணவர்களைத் தயார்ப்படுத்துவது என்பது "முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போலாகும்".
    இதில் Supreme Court-ன் தீர்ப்பும் முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது என்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.ஆம், கடந்த 2011 ஆம் ஆண்டு தற்போதைய முதல்வர் மாண்புமிகு செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்கள் பதவி ஏற்றவுடன் சமச்சீர்க் கல்வியை மாற்றி மறுபடியும் Matriculation கல்வியைக் கொண்டு வர முயற்சித்தார்.ஆனால், அதற்கு முட்டுக் கட்டையாக முன்னாள் தி.மு.க அரசு (கட்சி) Supreme Court-வரை சென்று, Matriculation Syllabus-ஐ அமுல்படுத்தினால் சாதாரண கிராமப்புற தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று ஒரு Case-ஐப் போட்டு அதில் வெற்றியும் கண்டு , ஒன்றுக்கும் உதவாத ஒரு syllabus = "சமச்சீர்க் கல்வி"ஐக் கொண்டு வந்தது.
    அப்பொழுது சமச்சீர்க் கல்விக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கிய Supreme Court, இன்று ஒன்றுக்கும் உதவாத சமச்சீர்க் கல்விஐக் கொண்டு, CBSE பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கடினமான NEET exam-ஐ கிராமப்புற மாணவர்கள் Pass செய்வார்களா என்று யோசிக்க வேண்டாமா? ஆனால் மாறாக NEET exam வேண்டும் என்று தீர்ப்புக்கூறியுள்ளது.
    மேலும், தற்பொழுது(2106-2017) +2 படிக்கும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். +2 பாதியில் வந்து NEET exam-ஐ implement பண்ணச் சட்டம் போடும் மத்திய அரசு, இத்தகைய எளிய மாணவர்களால் இந்தக் கடின NEET exam-ஐ எழுத முடியுமா என்று யோசிக்க வேண்டாமா? தமிழக அரசும் வரும் ஆண்டு NEET exam இருக்கிறதா இல்லையா என்று தெளிவாகக் கூறவில்லை.மாணவர்கள் தேர்வுக்குத் தயாராவ்து ஒரு நாளில் அல்ல, ஒரு வருடம் என்பது அரசுக்குத் தெரியுமா? தெரியாதா?
    மேலும் MBBS admission-க்கு முழு ஆண்டுத்தேர்வு மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படுமா ? இல்லை NEET exam score மட்டும் கருத்தில் கொள்ளப்படுமா ? அல்லது இரண்டுமா? இரண்டும் என்றால் ஒவ்வொன்றும் எவ்வளவு சதவீதம்?.இது போன்ற கேள்விகளுக்குத் தெளிவான பதில் இல்லை.
    மேலும், NEET exam வருவதால் சமச்சீர் கல்வி என்ற ஒரு தரம் தாழ்ந்த கல்வி பயின்ற கிராமப்புற, தமிழ் மொழியில் பயின்ற மாணவர்களின் நிலை என்ன ? இப்படிப்பட்ட மாணவர்கள் என்ன Doctor ஆகக் கூடாதா? கிராமப்புற, தமிழ் மொழியில் பயின்ற மாணவர்களுக்கு அறிவு இருக்காதா? ஒரே குழப்பம்.
    மேலும் நடந்து முடிந்த NEET 2016 examல் (மே, ஜூலை, இரண்டு நிலைகளிலும்) தமிழக மாணவர்கள் அதிகம் வெற்றியடையவில்லை.
    காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை +2 வுக்கு ஒரே syllabus வரும் வரை NEET என்பது சாத்தியமற்றது. இந்த NEET exam-ஐ நடைமுறைப்படுத்த படிப்படியாகப் பண்ண முடியுமே தவிர எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஒரேயடியாகப் பண்ண முடியாது.அதற்குக் குறைந்தது 8 வருடங்களாவது தேவை. ஆம் 2017ல் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவரிடம் இருந்து தொடங்க வேண்டும்.
    “கல்வி என்பது இயந்திரம் அல்ல, அது மனித மனநிலையோடு (psyche = mind, psychology = உளவியல்) குறிப்பாக, குழந்தைகளின் மனநிலையோடு சம்பந்தப்பட்டது” என்று இன்றைய ஆட்சியாளர்களும், அதிகாரமும்,சட்டமும் உணரவில்லை என்றே தோணுகிறது.
    தமிழக அரசு குறைந்தது அரசு மருத்துவக் கல்லூரிகளிலாவது சென்ற கல்வி ஆண்டைப் போன்றே +2 மதிப்பெண் அடிப்படையில் admission செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் NEET exam-ஐ குறைந்தது 5 ஆண்டுகளாவது அனுமதிக்கக் கூடாது , புதிய, CBSEக்கு இணையான தரமான syllabus வரும் வரை.
    இதற்கு மாநில அரசு மறுபடியும் Supreme Court-ஐ அணுக வேண்டும். செய்யுமா?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive