NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

"புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தக்கூடாது'

புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தக்கூடாது என்று மத்திய முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
 ஈரோடு அருகே, ஓடாநிலையில் தீரன் சின்னமலையின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மத்திய முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை அரசு விழாவாகக் கொண்டாடுவதைப்போல வீரபாண்டிய கட்டபொம்மன், வஉசி, பெரியார், காமராஜர் போன்றவர்களின் நினைவு நாளையும் அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும். சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களையும், மன்னர்களையும், அரசியல் தலைவர்களையும் அடுத்து வரும் சந்ததியினரும் நினைவு கூரத்தக்க வகையில் அவர்களது நினைவு தினத்தைப் போற்ற வேண்டியது அவசியமாகும்.
  தமிழகத்துக்குப் புதிய காங்கிரஸ் தலைவரை கட்சி மேலிடம் அறிவிக்கும் வரை நான் எனது மெளன விரதத்தைத் தொடர்வேன். தொடர்ந்து, மக்கள் பிரச்னைகளுக்காக பாடுபடும் இயக்கமாக காங்கிரஸ் திகழும்.
 நாட்டில் தலித்துகள் மீதான தாக்குதல் அதிகரித்து விட்டது. தலித்துகள் மீதான தாக்குதலுக்குப் பொறுப்பேற்று உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அதேபோல, பிரதமர் மோடியும் இச்சம்பவத்துக்குப் பொறுப்பேற்றுத் தனது பதவியை ராஜிநாமா செய்யவேண்டும்.  ஹிந்தி, சம்ஸ்கிருதம் போன்ற மொழித் திணிப்புகளில் மத்திய அரசு ஈடுபடக்கூடாது என்றார்.
 இப்பேட்டியின்போது, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி, மாவட்டத் துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா, அட்டவணை அனுமன்பள்ளி ஊராட்சித் தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.




2 Comments:

  1. 1.First all government school implement to privet school level
    2.Primary school to high education level implement technology subject (example: computer science)
    3.Technology improved by computer science basic to high level all student than improve job security
    4. Finally all govt employee my child studying govt school

    ReplyDelete
  2. No computer knowledge so no use( free loptop,wifi,and free internet),1st teach for students technology study than implement all(implement government school level )

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive