NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுப் பள்ளி நிலம் ஆக்கிரமிப்பு:கல்வித் துறை செயலருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

      மதுரை ஒத்தக்கடை அரசு பெண்கள் பள்ளியின் நிலத்தை மீட்க கோரும் மனுவுக்கு பள்ளிக்கல்வித்துறை செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
மதுரை யா.ஒத்தக்கடையைச் சேர்ந்த சாந்த மூர்த்தி தாக்கல் செய்துள்ள மனு:

யா.ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சொந்தமான நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதுதொடர்பாக ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது, மனுவை விசாரித்த நீதிமன்றம் நிலத்தை மீட்க அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், முறையான நடவடிக்கை இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பள்ளிக் கல்வித்துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive