NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கிடைத்த பரிசுத்தொகையில் தான் படித்த அரசு பள்ளிக்கு ரூ.30 லட்சம் நிதி

            ரியோ பாராலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற மாரியப்பன் வரும் 22ம் தேதி சேலம் திரும்புகிறார்
 
             மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள பரிசு தொகையில் இருந்து, தான் படித்த அரசு பள்ளிக்கு நிதியுதவி செய்ய அவர் முடிவு செய்திருப்பதாக அவரது பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். பிரேசில்
நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில், சேலம் மாவட்டம் ஓமலூர் தீவட்டிப்பட்டி அடுத்த பெரியவடகம்பட்டியை சேர்ந்த மாரியப்பன், உயரம் தாண்டுதல் போட்டியில், 1.89 மீட்டர் தாண்டி தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு தமிழக அரசு ரூ.2 கோடியும், மத்திய விளையாட்டு அமைச்சகம் ரூ.75 லட்சமும் பரிசு அறிவித்துள்ளன. மாரியப்பன் பெரியவடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தவர். ஆரம்ப காலத்தில், மாரியப்பனுக்கு பயிற்சி அளித்தவரான அந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் கூறியது:
வரும் 22ம் தேதி மாரியப்பன் தங்கவேலு சேலம் திரும்புகிறார். அவர் சொந்த ஊர் திரும்புகையில் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளோம். மாரியப்பன் தங்கவேலுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பரிசுகள் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதுதொடர்பாக அவரிடம் பேசினேன். பரிசு பணத்தில் ரூ.20 முதல் ரூ.30 லட்சம் வரை, அவர் படித்த பெரியவடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் வளர்ச்சிக்கு அளிக்க முடிவு செய்துள்ளார். பள்ளியின் தரத்தை உயர்த்தவும், விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தவும் இந்த நிதி செலவிடப்படும் என்றார். சொந்த ஊரில் சொந்த வீடு: மாரியப்பன் தங்கவேலுவின் தாய் சரோஜா கூறுகையில், நாங்கள் மிகவும் சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். பரிசாக கிடைத்துள்ள பணத்தில், இதே கிராமத்தில் சொந்த வீடு ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளோம் என்றார்.




1 Comments:

  1. Really very great. All the best for your bright future brother.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive