NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாளை 3-ஆம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்பில் காலியிடங்களுக்கான 3-ஆம் கட்ட கலந்தாய்வு புதன்கிழமை (செப். 28) நடைபெறவுள்ளது.

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றுக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் செப்டம்பர் 21 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெற்றது.

முடிவில் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 3 பி.டி.எஸ். இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரியில் 139 அரசு ஒதுக்கீட்டு இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 440 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன.

இந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 91 இடங்கள் மாநில அரசின் ஒதுக்கீட்டு சமர்ப்பிக்கப்பட்டது. அந்த காலியிடங்கள் மற்றும் மறுஒதுக்கீட்டுக்கான சிறப்புக் கலந்தாய்வு சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதன் முடிவில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஏற்பட்ட 91 காலியிடங்களும் நிரம்பின. இது தவிர 283 எம்.பி.பி.எஸ். இடங்கள் மறுஒதுக்கீட்டில் நிரப்பப்பட்டன.

3-ஆம் கட்ட கலந்தாய்வு: இதையடுத்து, 3-ஆம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 28-இல் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நிறைவு செய்ய வேண்டும் என்பது விதியாகும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive