NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

5.36 லட்சம் மாணவர்களுக்கு இலவச 'லேப் - டாப்'

         தமிழகத்தில், 2011 முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு, இலவச, 'லேப் - டாப்' வழங்கப்பட்டு வருகிறது. 
 
        கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், பல கட்டங்களாக, 42.6 லட்சம் லேப் - டாப்கள் வழங்கப்பட்டன. சட்டசபை தேர்தல் அறிக்கையில், 'மாணவர்களுக்கு இலவசமாக, 'இன்டர்நெட்' இணைப்பு வழங்கப்படும்' என, அ.தி.மு.க., அறிவித்தது. தற்போது, ஆட்சிக்கு வந்த பின், இலவச இன்டர்நெட் பற்றி முடிவெடுப்பதில், தாமதம் ஏற்பட்டுஉள்ளது.

அதனால், லேப் - டாப் கொள்முதல் பற்றிய அறிவிப்பை வெளியிடாமல், அரசு நிறுத்தி வைத்துள்ளது. இப்போது, முதலில் லேப் - டாப்களை கொள்முதல் செய்து விடலாம்; அப்புறம், இலவச இன்டர்நெட் இணைப்பு பற்றி யோசிக்கலாம் என, அரசு முடிவெடுத்து உள்ளது.
இதுகுறித்து, தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறுகையில், 'இந்த ஆண்டில், ஐந்து லட்சத்து, 36 ஆயிரம், லேப் - டாப்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன; அதற்கான உத்தரவு, வெளியிடப்பட்டு உள்ளது' என்றனர். ஆனால், இதுவரை, 'டெண்டர்' கோரவில்லை; அதற்கான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பதால், இந்த கல்வியாண்டில், மாணவர்களுக்கு இலவச, லேப் - டாப் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.




1 Comments:

  1. கணிணி ஆசிரியர்களுக்கு மட்டும் வேலை போடாதீங்க லேப்டாப் மட்டும் அள்ளி கொடுங்க....விளங்கிடும்....

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive