NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாமக்கல்: ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

ராணுவக் கல்லூரியில் 8-ஆம் வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கை நடக்க உள்ளதாகவும், தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய ராணுவக் கல்லூரியில் 2017-ஆம் கல்வி ஆண்டில் 8-ஆம் வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு வரும் டிசம்பர் மாதம் 1, 2- ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 7-ஆம் வகுப்புப் பயிலும் அல்லது தேர்ச்சி பெற்ற 11 முதல் 13 வயதுடையவராக இருக்க வேண்டும். இத்தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தை, தி கமாண்டன்ட், ஆர்ஐஎம்சி, டேராடூன்-248003 என்ற முகவரிக்கு கட்டணம் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

பொதுப் பிரிவினருக்கு ரூ.550, பட்டியல், பழங்குடியின வகுப்பினருக்கு ரூ.505 எனவும் விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை வரும் 30-ஆம் தேதிக்குள் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சென்னை-600003 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ஆங்கிலம், கணிதம், பொது அறிவு ஆகிய தாள்கள் கொண்டதாக எழுத்துத்தேர்வு நடக்கும். மேலும் விவரங்களுக்கு www.rimc.org என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive