NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

312 சுயநிதி பி.டி.எஸ். இடங்களை நிரப்ப நாளை கலந்தாய்வு.

        காலியாக உள்ள 312 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களை நிரப்புவதற்கான சிறப்பு கலந்தாய்வு சென்னையில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
 
     தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், பி.டி.எஸ். இடங்கள் ஆகியவற்றுக்கு 3 கட்டங்களாக கலந்தாய்வு நடத்தி இடங்கள் நிரப்பப்பட்டன.

மூன்றாவது கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அனைத்து எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் ஆகியவை நிரம்பின.
தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 312 பி.டி.எஸ். இடங்கள் காலியாக இருந்தன.
இந்த இடங்களுக்கான சிறப்புக் கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெறவுள்ளது. காலை 9 மணி முதல் நடைபெறும் இந்த கலந்தாய்வில் பங்கேற்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive