NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசின் கொள்கையை விமர்சித்தால் ஒழுங்கு நடவடிக்கை... பாயும்!: ஊழியர் சங்கங்களுக்கு மத்திய அமைச்சகம் கடும் எச்சரிக்கை

       புதுடில்லி:'மத்திய அரசையோ, அதன் கொள்கை களையோ விமர்சித்தால், அரசு ஊழியர் சங்கங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என,மத்திய அரசு எச்சரித்துள்ளது.


ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை செயல்படுத்துவதற் கான மென்பொருளை தயாரிக்க, ஜி.எஸ்.டி.என்., என்றழைக்கப்படும், சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க் என்ற தனியார் நிறுவனம் அமைக் கப்பட்டு உள்ளது.

இதில்,மத்திய அரசுக்கு, 24.5 சதவீதம்;அனைத்து மாநில அரசுகளுக்கும் மொத்தமாக, 24.5 சதவீதம் பங்கு உள்ளது. மீதமுள்ள, 51 சதவீத பங்கு, சில தனியார் நிதி நிறுவனங்களிடம் 
உள்ளது.

இந்நிலையில், இந்த நிறுவனத்தின் நிர்வாகம் குறித்தும், மத்திய அரசின் சில முடிவுகள் குறித்தும், மத்திய அரசு ஊழியர் சங்கங்கள், கருத்து தெரிவித்திருந்தன. அதைத் தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சகம் சார்பில் வெளியிடப் பட்டுள்ள உத்தரவில் கூறப் பட்டுள்ள தாவது:

'மத்திய அரசு குறித்தோ, அதன் திட்டங்கள் குறித்தோ கடுமையாக விமர்சித்து செய்தி வெளியிடக் கூடாது' என, மத்திய அரசு பணி யாளர் பணி விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இருப்பினும், சமீப காலமாக, மத்திய அரசு ஊழி யர் சங்கங்கள், அரசின் கொள்கையை கடுமை யாக விமர்சித்துகருத்துக்களையும், செய்தி களையும் வெளி யிட்டு வருகின்றன.

இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், ஊழியர் கள் சங்கங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை உள் ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப் படும். 

மேலும் அங்கீகாரம் இல்லாத அல்லது அங்கீ காரம் காலாவதியான அரசு ஊழியர் சங்கங்கள், கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கு, மத்திய அரசு அளிக்கும் வசதிகளை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பின்னணி என்ன?

ஜி.எஸ்.டி.என்., எனப்படும், ஜி.எஸ்.டி., வரி விதிப்புக்கான மென்பொருள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புகளை அமைக்கும் தனியார் நிறுவனம் துவக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.இது தொடர்பாக, இந்திய வருவாய் சேவை - சுங்கம் மற்றும் கலால் அதிகாரிகள் சங்கம், சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது; அதில் கூறியுள்ளதாவது: 

மறைமுக வரி விதிப்பு குறித்தோ, அதன் தொழில்நுட்ப தகவல் கள் குறித்தோ, புதிதாக துவங்கப்பட்டுள்ள, ஜி.எஸ். டி.என்., நிறுவனத்துக்கு எந்த அனுபவமும் இல்லை. 

அதனால், இந்தப் பணியை, மத்திய சுங்கம் மற்றும் கலால் வாரியத்தின் கணினி பிரிவின் டைரக்டர் ஜெனரல் கட்டுப்பாட்டில் செயல்படுத் திட வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஜி.எஸ்.டி., கவுன்சில் செயலகத்தின் செயலராக, வருவாய் துறை செயலரை நிய மிக்க, மத்திய அமைச்சரவை முடிவு செய்தது. இது குறித்தும், இந்த சங்கம் கருத்து தெரிவித் திருந்தது. பா.ஜ., - எம்.பி.,யான சுப்பிரமணியன் சாமியும், இது குறித்து, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அடுத்த ஆண்டு ஏப்ரல், 1ம் தேதி முதல், ஜி.எஸ்.டி., வரி விதிப்பை நடைமுறைபடுத்தும் முயற்சி யில் மத்திய அரசு தீவிர மாக உள்ளது. இந்நிலையில், அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊழியர் சங்கம் கூறியுள்ள கருத்துக்கள், மத்திய அரசுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளன. அதனால் தான், இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive