NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அறிவித்திடுக! அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை

தமிழக அரசுஊழியர் மற்றும்ஆசிரியர்களுக்குஆண்டுக்கு இருமுறை ஜனவரிமற்றும்ஜூலை ஆகிய மாதங்களில்அகவிலைப்படிஉயர்வு வழங்குவதுநடைமுறையாகும். 
மத்திய அரசுஊழியர்களுக்குதிருத்தப்பட்டஊதிய விகிதம் 1.7.2016-ல்அமல்படுத்தப்பட்டுள்ளது. புதியஊதிய விகிதம்அமல்படுத்தப்பட்டசூழ்நிலையில் மத்திய அரசுஊழியர்களுக்குஅகவிலைப்படிஉயர்வு வழங்குவதற்கானபணிகள்நடைபெற்று வருகிறது.
ஆனால், தமிழகத்தில் புதிய ஊதியவிகிதம்வழங்கப்படாத நிலையில்நாளது வரை அகவிலைப்படிஉயர்வுவழங்காமல் இருப்பதுஏற்புடையதல்ல. இது அரசுஊழியர்களிடம்மிகுந்தவேதனையையும், அதிருப்தியையும்உருவாக்கியுள்ளது. தீபாவளிக்குமுன்பு அரசுஊழியர்களுக்குஅகவிலைப்படிஉயர்வு நிலுவைத்தொகைவழங்குவது என்பது பலஆண்டுகால நடைமுறையாகும்.
எனவே, மத்திய அரசின்அறிவிப்புக்குக்காத்திருக்காமல்தமிழக அரசுஊழியர்களுக்குஅகவிலைப்படிஉயர்வை 1.7.2016 முதல்வழங்குவதற்கானஅறிவிப்பைவெளியிட்டுதீபாவளிக்கு முன்பு அத்தொகைரொக்கமாக அரசுஊழியர்களுக்கு கிடைக்கவழிவகைசெய்ய தமிழகஅரசைக்கேட்டுக்கொள்கிறோம்.
இந்த ஆண்டு அக்டோபர்மாதஇறுதியில் 29-ஆம் தேதிதீபாவளிப்பண்டிகை வருகிறது.மாத இறுதி நாளாகஇருப்பதால்பொருளாதார நெருக்கடியுடனும்,மனச்சுமையுடனும் தீபாவளிப்பண்டிகையை கொண்டாடவேண்டிய சூழ்நிலைஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இதுபோன்றசூழ்நிலைகளில் பண்டிகைக்குமுன்பு மாத ஊதியத்தைஅரசுஊழியர்களுக்கு தமிழக அரசுவழங்கியுள்ளது. தற்போதுபுதுச்சேரி அரசு, தீபாவளிக்குமுன்புஅக்டோபர் மாத ஊதியம்
வழங்கஉத்தரவிட்டுள்ளது.
ஆகவே, தமிழக அரசுஊழியர்களும்தீபாவளிப்பண்டிகையை சிறப்பாகக்கொண்டாடும் வகையில் அக்டோபர்மாதஊதியத்தை முன்னதாகவழங்க வேண்டும்.
மேலும், தமிழக அரசில்பணியாற்றும் பெண்அரசுஊழியர்களுக்கு தற்போதுவழங்கப்பட்டு வரும்மகப்பேறுவிடுப்பு ஆறு மாதம் என்பதுஒன்பதுமாதமாக உயர்த்தப்படும்என்றுதமிழக முதல்வர் கடந்தசட்டமன்றக் கூட்டத்தொடரின்போதுஅறிவித்தார். முதலமைச்சரின்மேற்கண்ட அறிவிப்பின்அடிப்படையில் மகப்பேறு விடுப்பைஒன்பது மாதமாகஉயர்த்தியதற்கானஅரசாணைநாளது வரைவெளியிடப்படாமல்உள்ளது.
எனவே, முதலமைச்சர்சட்டமன்றத்தில் அறிவித்தபடிமகப்பேறு விடுப்பை ஆறுமாதத்திலிருந்து ஒன்பதுமாதமாகஉயர்த்தி அரசாணையைஉடனடியாக வெளியிடவேண்டும்என வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறோம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive