Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தென் மத்திய ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

           தென் மத்திய ரயில்வேயில் அதலெடிக்ஸ், பேட்மிண்டன், குத்துச்சண்டை, கிரிக்கெட், ஹேண்ட் பால், கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளையாட்டு பிரிவுகள் வாரியான தகுதி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Athletics (Men): 100M/ 200M/ Triple Jump, Pole Vault - 04
2. Athletics (Women): 100M/ Triple Jump/ Heptation, High Jump - 04
3. Badminton (Men): Singles - 01
4. Basketball (Women) : Point Guard, Forward - 02
5. Boxing (Men): Welter Weight (69 Kgs), Light Heavy Weight (81 Kgs), Heavy Weight (91 kgs) - 03
6. Cricket (Women): Batswoman-Cum-Medium Pacer, Medium Pacer - 02
7. Handball (Women): Centre Position - 01
8. Kabaddi (Women): All Rounder- 02
9. Volley Ball (Women): All Rounder, Attacker - 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900 அல்லது ரூ.2,000.
வயது வரம்பு: 1.1.2017 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10ம் வகுப்பு, +2 தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்து சம்பந்தப்பட்ட விளையாட்டு பிரிவுகளில் மாநில, தேசிய, பல்கலைக்கழக, சர்வதேச போட்டிகளில் பங்கு பெற்று குறைந்தது 3-வது நிலையை பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: உடல் தகுதி, விளையாட்டு தகுதி, கல்வித்தகுதி, பொது அறிவு, நேர்முகத் தேர்வு போன்ற தகுதிகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Financial Advisor & Chief Accounts Officer, South Central Railway என்ற பெயரில் செகந்திராபாத்தில் மாற்றத்தக்க வகையில் டி.டி அல்லது போஸ்டல் ஆர்டர் எடுத்து செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, சிறுபான்மையினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்பட்டோர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.scr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கணினியில் தட்டச்சு செய்து பின்னர் தெளிவாக பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Assistant Personnel Officer (Rectt., & HQ),
Room No: 416,
Office of the Chief Personnel Officer,
4th Floor,
Rail Nilayam,
Secunderabad- 500 071.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.10.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.scr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive