NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அழகியல் சார்ந்த மன அழுத்தம் அதிகரிப்பு... ஆறு மனமே ஆறு! கவுன்சிலிங்கில் வெளிப்படுத்திய மாணவர்கள்.

         சினிமா காட்சிகளின் தாக்கத்தால், பள்ளி மாணவர்களிடம் நிறம், உயரம், உருவம் என, அழகியல் சார்ந்த மன அழுத்தம் அதிகரித்துள்ளது. 
 
           இதை, ஆரம்ப நிலையிலே அறிந்து, பெற்றோர் முறையாக, வழிநடத்த வேண்டுமென, உளவியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பள்ளி மாணவர்கள் மத்தியில் எழும், தற்கொலை எண்ணங்களில் இருந்து மீட்டெடுக்க, நடமாடும் உளவியல் ஆலோசனை மையங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில், பெரும்பாலும், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையுள்ள மாணவர்களுக்கு, அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். பதின்பருவம் காரணமாக, ஹார்மோன் வளர்ச்சியால், உடல், மன அளவில் ஏற்படும் மாறுதல்களை அறிந்து, சமநிலைப்படுத்தி, படிப்பில் கவனத்தை திசைத்திருப்புவதே, உளவியல் மையத்தின் நோக்கம். பள்ளி துவங்கும் போது கவனச்சிதறல், குடும்பம், நண்பர்கள், வெளிவட்டார துாண்டுதல், சமூக ஊடகங்களின் தாக்கத்தில் இருந்து மாணவர்களை விடுவிக்க, குழு மற்றும் தனிநபர் கவுன்சிலிங் அளிக்கப்படும். தேர்வு நேரங்களில், தேவையில்லாத பயம், பதட்டம், தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுவிக்க, பல்வேறு தலைப்புகளில் விவாதித்து, உளவியல் ரீதியாக வழிநடத்தப்படும். தற்போது கல்வியாண்டு துவங்கி, நான்கு மாதங்களே நிறைவடைந்துள்ளதால், படிப்பில் கவனத்தை செலுத்துவதற்கான, ஆரம்ப கட்ட கவுன்சிலிங், 30 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், நடந்தது. இதில், அழகியல் சார்ந்த சிந்தனைகள், காதல் உணர்வுகளை கட்டுப்படுத்துதல், மற்றவர்கள் முன்னிலையில் தன்னை அடையாளப்படுத்துவது எப்படி போன்ற கேள்விகளே, இருதரப்பினரிடம் இருந்தும் அதிகளவில் வந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். நடமாடும் உளவியல் ஆலோசனை மைய கவுன்சிலர் அருள்வடிவு கூறுகையில்,''கோவை மாவட்டத்தில், குழு கலந்தாய்வில், 1,544 மாணவர்கள் மற்றும் 2,439 மாணவியர் பங்கேற்று, ஆலோசனை பெற்றுள்ளனர். கருப்பான நிறம், மெலிவான தோற்றம், உடல் பருமனாக இருத்தல், உயரமாக இருப்பது, முகத்தில் ஏற்படும் சிறிய மாற்றங்களுக்கு கூட, பெரிதளவில் கவலைப்படுகின்றனர். காதல் உணர்வுகளை கட்டுப்படுத்துதல், படிப்பில் கவனத்தை திசைத் திருப்புதல், அதீத துாக்கம், தேவையில்லாத பதட்டம், திடீர் அச்ச உணர்வு ஏற்படுவதாக, பகிர்ந்து கொண்டனர். ''இதற்கு, சமீபத்தில் வெளியான திரைப்படங்களின் தாக்கம் தான் அதிகமிருந்தது. அழகியல் சார்ந்த சிந்தனைகள் மேலோங்கும் போது, குழந்தைகளிடம் இருக்கும் சிறப்பான விஷயங்களை சீர்துாக்கி, இதுபோன்ற அழுத்தங்களில் இருந்து வெளிக்கொணர, பெற்றோர் ஒத்துழைக்க வேண்டும்,'' என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive