NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'தமிழகத்தில், வங்கி ஏ.டி.எம்., மையங்களில், இன்று முதல் புதிய, 2,000 ரூபாய் நோட்டு

          'தமிழகத்தில், வங்கி ஏ.டி.எம்., மையங்களில், இன்று முதல் புதிய, 2,000 ரூபாய் நோட்டு கிடைக்கும்' என, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். 
 
       மேலும், வரும், 24 வரை, பெட்ரோல் பங்க், ரயில் மற்றும் பஸ் நிலையங்களில், பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.


வங்கி ஏ.டி.எம்., மையங்களில் பணம் எடுப்போரின் எண்ணிக்கை அதிகம். அதை கருத்தில் வைத்து, ரிசர்வ் வங்கி துணை கவர்னர் தலைமையில், நாட்டில் உள்ள நான்கு பெரிய வங்கிகளின் அதிகாரிகள், நிதி மற்றும் உள்துறை அதிகாரிகள் அடங்கிய அதிரடிப் படையை, மத்திய அரசு அமைத்துள்ளது. அவர்கள், ஏ.டி.எம்.,களுக்கு, புதிய கரன்சிகள் விரைவாக சென்றடைவதை உறுதி செய்வர்.

மேலும், வங்கி ஏ.டி.எம்.,களில், புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள், இன்று முதல் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கு தேவையான மாற்றங்கள், ஏ.டி.எம்., மையங்களில் நேற்று மாலை செய்யப்பட்டன.சென்னையில் சில ஏ.டி.எம்.,களில், இன்று முதல் புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும்; மாநிலத்தின் மற்ற பகுதிகளில், ஓரிரு நாளில் கிடைக்கும்.இந்நிலையில், கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து, 100 ரூபாய் மற்றும் புதிய, 500 ரூபாய் கரன்சிகள் உள்ள கன்டெய்னர்கள், நேற்று முன்தினம் சென்னை வந்துள்ளன.

இதுகுறித்து, ரிசர்வ் வங்கி ஊழியர்கள் கூறியதாவது:நேற்று காலை வரை, 100 ரூபாய்க்கு தட்டுப்பாடு இருந்தது. தற்போது, 100 ரூபாய் நோட்டுகள் வினியோகம் சீராகியுள்ளது. எனினும், 500 ரூபாய் நோட்டுகள் உள்ள பெட்டிகள், நேற்று மதியம் வரை பிரிக்கப்படவில்லை; அவற்றை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது.அப்பணி நிறைவடைந்ததும், இன்று முதல் சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்களில் உள்ள வங்கிகளில் வினியோகிக்கப்படும். மற்ற பகுதிகளில், நாளை முதல் தாராளமாக கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதை, டில்லியில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, மத்திய அரசின் பொருளாதாரவிவகாரங்களுக்கான ஆலோசகர் சக்திகாந்த தாசும் உறுதி செய்தார்.
நீட்டிப்பு:
அதே நேரத்தில், செல்லாததாக அறிவிக்கப்பட்ட பழைய நோட்டுகளை, பெட்ரோல் பங்க்குகள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பயன்படுத்திக் கொள்ள, 24ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது: பெட்ரோல் பங்க்குகள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில், பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த, 14ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டிருந்தது; இது, 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களிலும் பழைய நோட்டுகளை பயன்படுத்தி பொருட்களை வாங்கலாம்.
தொலைபேசி கட்டணம், வரிகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு பழைய நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ள, 24 வரை அனுமதி உண்டு. இருப்பினும், நடப்பு பில்களுக்கு மட்டுமே பழைய நோட்டுகளை பயன்படுத்த முடியும். இனி வரும் மாதங்களுக்கு செலுத்த வேண்டிய பில் தொகையை, முன்கூட்டியே செலுத்த அனுமதி இல்லை. இந்த வசதியை, தனிநபர் அல்லது வீடுகள் மட்டுமே பயன்படுத்த முடியும்.இவ்வாறு அரசு அதிகாரிகள் கூறினர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive