NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழ்நாடு பல்கலையில் டிச., 2ல் பட்டமளிப்பு விழா

       தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின், 9வது பட்டமளிப்பு விழா, டிச., 2ல் நடக்கிறது. இதில், 11 ஆயிரத்து 181 பேர் பட்டம் பெறுகின்றனர்.

         இது குறித்து, பதிவாளர், எஸ்.விஜயன் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு:  தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின், 9வது பட்டமளிப்பு விழா, டிச., 2 காலை, 11:30 மணிக்கு, சென்னை பல்கலையின் நுாற்றாண்டு விழா அரங்கில் நடக்கிறது. இதில், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், உயர் கல்வி அமைச்சர், கே.பி.அன்பழகன் பங்கேற்கின்றனர். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா பங்கேற்று, பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார். பல்கலையின் துணைவேந்தர் பாஸ்கரன் வரவேற்புரை மற்றும் ஆண்டறிக்கை வழங்குகிறார்.

        விழாவில், 3,522 முதுநிலை, 7,659 இளநிலை மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். 2,725 டிப்ளமோ மற்றும் 154 முதுநிலை டிப்ளமோ மாணவர்கள் என, 14 ஆயிரத்து 60 மாணவர்கள் சான்றிதழ் பெறுகின்றனர்.பல்கலை அளவில் முதலிடம் பெற்று, 142 பேர் தங்கப் பதக்கமும், 256 பேர் இரண்டு, மூன்றாம் இடமும் பெற்று, சான்றிதழ் பெறுகின்றனர். கனடாவின் காமன்வெல்த் கல்வி கழகத்தின், பாராட்டு சான்றிதழ், பரிசுத்தொகை, 25 ஆயிரம் ரூபாய், இளநிலை மாணவி முத்துவுக்கு வழங்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive