NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டெல்லியில் பள்ளிகளுக்கு மேலும் 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

        காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதன் எதிரொலியாக டெல்லியில் பள்ளிகளுக்கு மேலும் 3 நாட்களுக்கு விடுமுறையை நீடித்தும், 5 நாட்களுக்கு பழைய கட்டிடங்களை இடிக்க தடை விதித்தும் முதல்–மந்திரி கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார்.

மக்கள் கடும் அவதி
நாட்டின் தலைநகர் டெல்லியில் தீபாவளி பண்டிகைக்கு பின்னர் கடந்த ஒரு வாரமாக காற்றில் மாசு அதிகரித்து உள்ளது. விடிந்து பகல் பொழுது வந்த பின்னரும் காற்றில் மாசு காணப்படுவதால் டெல்லி நகர மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
குறிப்பாக குழந்தைகளும், வயதானோரும் மூச்சு விட சிரமப்படுகின்றனர். கண் எரிச்சலுக்கும் ஆளாகி வருகிறார்கள். இதனால் பகல் நேரத்தில் டெல்லியில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுகிறது. மக்கள் சுவாச கவசம் அணிந்து நடமாடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
அளவு அதிகரிப்பு
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காணப்பட்ட காற்று மாசுவின் அளவை விட நேற்று இன்னும் அதிகரித்து காணப்பட்டது. 200 மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்த எதையுமே பார்க்க முடியவில்லை. மேலும் நகரின் மாசு குறியீட்டு அளவு 428–ல் இருந்து 825 ஆக உயர்ந்தது. இது மிகவும் கடுமையான நிலை என்று மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த அளவு அடுத்த 3 நாட்களில் இன்னும் பல மடங்கு அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்துவிட்டால் அது மிகவும் பரிதாபகரம் என்ற நிலையை அடையும் என்று சுற்றுச் சூழல் விஞ்ஞானிகள் கவலைப்படுகின்றனர்.
முதல்–மந்திரி நடவடிக்கை
கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாளுக்கு நாள் காற்றில் மாசு அதிகரித்து வருவது, டெல்லி நகர மக்களை வெகுவாக கவலை கொள்ளச் செய்து இருக்கிறது.
இதையடுத்து, மாநில முதல்–மந்திரி கெஜ்ரிவால் காற்று மாசுவை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். நேற்று அவர் தனது மந்திரிசபையை கூட்டி அவரச ஆலோசனையும் நடத்தினார்.
பின்னர் இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
விடுமுறை நீட்டிப்பு
டெல்லியை காற்று மாசு அடைத்துக் கொண்டு உள்ளது. இந்த விவகாரத்தை அரசியல் ஆக்குவதை விடுத்து இந்த தருணத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது மிகவும் அவசியம் ஆகும். காற்றில் மாசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அடுத்த 5 நாட்களுக்கு பழைய கட்டிடங்களை இடிப்பதற்கும் புதிய கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
பள்ளிகளுக்கு மேலும் 3 நாட்கள் விடுமுறை நீட்டிக்கப்படுகிறது. ஆஸ்பத்திரிகள் தவிர வேறு எந்த இடத்திலும் அடுத்த 10 நாட்களுக்கு கனரக ஜெனரேட்டர்களை இயக்குவது தடை செய்யப்படுகிறது.
இதேபோல் இன்னொரு நடவடிக்கையாக பதர்பூர் அனல் மின்நிலையம் செயல்படுவது 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. நகரில் அடுத்த 10 நாட்களுக்கு வாகனங்களில் கழிவு சாம்பல் எடுத்து செல்லக்கூடாது.
வெளியேற வேண்டாம்
திங்கட்கிழமை(இன்று)டெல்லி நகரின் சாலைகள் அனைத்தும் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்யப்படும். பொதுப் பணித்துறையினரும் சாலைகளை சுத்தமாக துடைப்பார்கள். குப்பை கிடங்குகளில் எரியும் தீ அணைக்கப்படும்.
எனவே பொதுமக்கள் கூடுமானவரை வீடுகளுக்குள்ளேயே இருப்பது நல்லது. வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். முடிந்தால் பணிகளை வீடுகளில் இருந்தவாறே முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெண்கள் ஆர்ப்பாட்டம்
டெல்லி மாநில மந்திரி சபை கூட்டத்தை தொடர்ந்து, மாநில கவர்னர் நஜீப் ஜங் இன்று(திங்கட்கிழமை) தனது வீட்டில் உயர் மட்ட குழு கூட்டத்தை கூட்டி காற்றில் மாசு அதிகரித்து இருப்பது குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
இதற்கிடையே, காற்றில் மாசு அதிகரிப்பை கட்டுப்படுத்த கோரி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று பெண்கள், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சுகாதார அவசர நிலையை டெல்லியில் அறிவித்து மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், சுகாதார அறிவுரை குறிப்புகளை உடனடியாக வெளியிடவேண்டும் என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive