NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET: பணியில் உள்ள ஆசிரியர்கள் பணிப் பாதுகாப்பு கேட்டு மாண்புமிகு தமிழக கல்விஅமைச்சரைச் சந்தித்து மனு.


         23/08/2010  க்குப் பிறகு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும்சிறுபான்மையினர் பள்ளிகளில் முறையான கல்வித் தகுதிகளுடன் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் கட்டாயக் கல்வி உரிமை சட்ட அடிப்படையில் TET நிபந்தனைகளை கூறிபணியை தொடர அனுமதிக்கப்பட்டனர்.

 
கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு சில பணப் பயன் மறுக்கப்பட்ட நிலையில்  பணியில் உள்ளஇந்த ஆசிரியர்கள் பணி நிபந்தனை காலம் வரும் நவம்பர் 15 ஆம்  தேதியுடன்முடிகின்றது. 


  ஆசிரியர் தகுதித் தேர்வில் இவர்களுக்கு முழுவதும் விலக்கு கொடுக்கும்பட்சத்தில்  சுமார் மூவாயிரம் ஆசிரியக் குடும்பங்களின் வாழ்வாதாரம் தமிழகஅரசால் பாதுகாக்கப்படும்.இந்த பிரச்சினை தொடர்பாக நேற்று மதுரையில் மாண்புமிகு தமிழக கல்வித்துறை அமைச்சரை TET நிபந்தனைகளுடன் பணி புரியும் ஆசிரியர்களின் மாநிலம் தழுவியபிரதிநிதிகள் சந்தித்து மனு கொடுத்து  உள்ளனர்.

இந்த சந்திப்பின் போது தமிழக தொழிற்கல்வி ஆசிரியர்கள் சங்க ஆசிரியர்களும்அவர்களின் ஊதிய முரண்பாடு தொடர்பான மனுவைக் கொடுத்தனர்மிகவும் பொறுமையாக இவர்களில் பிரச்சினைகளைக் கேட்டு மனுவை பெற்றுக்கொண்டதாகவும் அவ்வாசிரியர்கள் கூறினர். மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மாவின் கவனத்தில் இந்த மனு கொண்டு செல்லப் பட்டுவிரைவில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET லிருந்து முழுவதும் விலக்கு என்ற நல்ல தீர்வு கிடைக்கும் என இந்த பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் பிரதிநிதிகள்தெரிவித்தனர்.






3 Comments:

  1. விலக்கு அளித்தால் எங்களுக்கு அம்மாதான் கண்கண்ட தெய்வம் குலசாமி விலக்கு அளியுங்கள் தாயே

    ReplyDelete
  2. Dear sir...pls dont use very most honorable word compared with ALMIGHTY ... honourable TN CM...only...Bcz MAN PROPOSSES GOD DISPOSSESSED

    ReplyDelete
  3. Dear sir...pls dont use very most honorable word compared with ALMIGHTY ... honourable TN CM...only...Bcz MAN PROPOSSES GOD DISPOSSESSED

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive