NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மற்றவர்கள் கணக்கில் பணம் செலுத்த தடை

        வங்கி வாடிக்கையாளர்கள், தங்களது கணக்கில் நேரடியாக பணம் எடுப்பது, செலுத்து உள்ளிட்ட பணிகள் துவங்கின. ஆனால், ஒருவரது வங்கி கணக்கில், மற்றவர்கள் பணம் செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

         மத்திய அரசின் செல்லாத நோட்டு அறிவிப்பால், நவ., 9ல், வங்கிகள் இயங்கவில்லை. நேற்று முன்தினம், பழைய நோட்டுகளை மாற்றும் பணி துவங்கியது. நேற்று முதல், அவரவர் வங்கி கணக்கில் பணம் செலுத்துதல், எடுத்தல் போன்ற பரிவர்த்தனைகள் ஆரம்பித்தன. பணம் செலுத்துவோர், தங்களது வங்கி கணக்கில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலுத்தலாம். ஆனால், வங்கியில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலுத்துவோர், 'பான்' கார்டு நகல் அல்லது கணக்கு எண்ணை குறிப்பிட வேண்டும்; ஆதார் எண்ணும் கட்டாயம். வங்கி கணக்கு வைத்திருப்போர் மட்டுமே நேரடியாக பணம் செலுத்த முடியும். ஒருவரது கணக்கில் மற்றவர்கள் பணம் செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள், மிகவும் இயலாதவர்களாக இருந்தால் பணம் செலுத்தும் சீட்டில், அவர்களின் கையெழுத்தை சோதனை செய்து பணம் பெறப்படுகிறது. வணிக நிறுவனங்களின் கணக்குக்கு, உரிமையாளர் கையெழுத்து மற்றும் நிறுவன முத்திரையுடன் பணம் பெறப்படுகிறது.வங்கி கணக்கிலிருந்து, வங்கி கவுன்டர்கள் மூலம் நேரடியாக பணம் வழங்கும் முறையும் நேற்று துவங்கியது. ஒரு நாளைக்கு, 10 ஆயிரம் ரூபாயும், ஒரு வாரத்தில், 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும். இக்கட்டுப்பாட்டால், மற்றவர்களின் வங்கி கணக்கில், வெளியூர்களிலிருந்து, சி.பி.எஸ்., என்ற ஒருங்கிணைந்த, ஆன்லைன் முறையில் பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பணம் மாற்ற தடையில்லை : ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு, ஆன்லைன் முறையில் பணம் மாற்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. தபால் நிலையங்களில் பணம் எடுக்கவும், பெறவும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. விமான நிலையங்களில் செயல்படும் அதிகாரப்பூர்வ பணம் மாற்றும் சேவை மையங்கள், டாடா நிறுவனத்தின், 'இன்டிகேஷ், இந்தியா ஒன்' போன்ற, அங்கீகாரம் பெற்ற தனியார், ஏ.டி.எம்., மையங்களுக்கு, வங்கிகள் பணம் வழங்கும் முறைக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive