NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

DA Hike News: அகவிலைப்படி உயர்வு தொடர்பாக நிதித் துறை வட்டாரங்களில் இருந்து நாம் பெற்றுள்ள தகவல்.

            மத்திய அரசு 7 வது ஊதியக் குழுவின் புதிய ஊதிய விகிதத்தினை கணக்கில் கொண்டு 2% அகவிலைப்படி உயர்வினை 01.07.2016 முதல் வழங்க அறிவித்துள்ளது. 

         தமிழக அரசு ஏன் இன்னும் அகவிலைப்படி உயர்வினை அறிவிக்கவில்லை என அனைத்து தரப்பினரும் மனக்குமுறலுடன் கேட்டு வருவதை உணரமுடிகிறது.



            உண்மைத் தன்மையை அறிய நாம் நிதித் துறை வட்டாரங்களில் அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது "மத்திய அரசு புதிய ஊதிய விகிதத்தில் ஊதியம் (Revised scale) பெறுபவர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வு அறிவித்துள்ளது.ஆனால் பழைய ஊதிய விகிதத்தில் ஊதியம் (Pre revised scale) பெறுபவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இன்னும் அறிவிக்கப் படவில்லை. விலைவாசி புள்ளி விவர உயர்வுப்படி கணக்கிட்டு மத்திய அரசில் பழைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ஆணை வெளிவந்தவுடன் தமிழக அரசும் தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கான ஆணை வெளியிடும்." என்று நிதித் துறை வட்டாரத்திலிருந்து தகவல் கிடைக்கப்பெற்றது என்பதை உங்களுக்கு தகவலுக்காக தெரிவித்துக்கொள்கிறேன்.



நன்றி

அண்ணன் வா.அண்ணாமலை,

ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive