Printfriendly

www.Padasalai.Net

Padasalai

Menu (Please wait for Full Loading)

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

        பெட்ரோல்பங்க் உரிமையாளர்களுக்கு விளிம்பு தொகையை உ யர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

பேச்சு வார்த்தையில் உடன்பாடு


பெட்ரோல்பங்க் உரிமையாளர்கள் தங்களுக்கான விளிம்புத் தொகையின் அளவை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்ட அறிவிப்பு செய்தனர்.
இதனை தொடர்ந்து விளிம்பு தொகையை உயர்த்தி வழங்குவது குறித்து பெட்ரோல்பங்க் உரிமையாளர்கள் சங்கத்தினர் எண்ணெய் நிறுவனங்களுடன் மும்பையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பெட்ரோல் லிட்டருக்கு 14 காசுகளும், டீசல் லிட்டருக்கு 10 காசுகளும் உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
போராட்டம் ஒத்திவைப்பு 
மேலும் ஆண்டிற்கு இருமுறை விளிம்புத்தொகையை உயர்த்தி வழங்கவும் பேச்சுவார்த்தையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனையடுத்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. கோரிக்கைகளை நிறைவேற்ற 7 நாட்கள் அவகாசம் கோரியுள்ளது பெட்ரோலியத்துறை

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Blogger news

Blogroll

Total Pageviews

Most Reading