NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET:மாண்புமிகு முதலமைச்சரின் தனிப்பிரிவில் ஆசிரியர்தகுதித்தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றோருக்கு முன்னுரிமை கோரிஅளிக்கப்பட்ட மனுவில் தனிப்பிரிவில் அளித்த பதில்.

       நான் 2013ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் 96 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளேன். எனது பாடப்பிரிவான இயற்பியல் பாடத்தில் சுமார் 800 பேர் தேர்ச்சி பெற்றனர்.  
           தற்போது உச்சநீதிமன்ற உத்திரவின் பேரில் 5 சதவீத தளர்வு ஆணை மற்றும் வெயிட்டேஜ் முறை ஆணையும் செல்லும் என்பதால் இயற்பியல் பாடப்பிரிவில் சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டோர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்கள்.இந்த வெயிட்டேஜ் முறையின் முலம் நான் பணிக்கு தகுதிபெறவில்லை. இந்த முறையில் 60 - TET மதிப்பெண் அடிப்படையிலும் 40 - கல்வி தகுதி அடிப்படையிலும் மொத்தமாக 100 என்ற அடிப்படையில் பணிக்கு தேர்ந்தேடுக்கப்படுகிறார்கள். நான் அடுத்த TET தேர்வில் 60 (150/150) மதிப்பெண் பெற்றாலும் 40 க்கான முழு கல்வி தகுதி மதிப்பெண்ணை பெற இயலாது. எனவே 40 கல்வி தகுதி அடிப்படையான 12ம் வகுப்பு 10, பட்டப்படிப்பு 15 மற்றும் கல்வியில் பட்டப்படிப்பு 15 மொத்தத்தில் 40 என்ற முழு மதிப்பெண் பெற கல்வி தகுதியின் சதவீதத்தை உயர்த்த வழிவகை ஏற்படுத்தித்தருமாறும் மேலும் நான் கல்வியியல் பட்டத்தை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 9 வருடம் காத்திருக்கிறேன் என்றும், TET சான்று 7 வருடம் மட்டுமே செல்லுபடியாகும் என்பதால் 3 வருடம் முடிந்து விட்டதால் எனக்கு 4 வருடம் மட்டுமே செல்லுபடியாகும் எனவே வரும் காலங்களில் நிரப்பும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு எனக்கு முன்னுரிமை வழங்கும்படியும். தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.
Rejected
Concerned Officer
SCHOOL EDUCATION - SECY,TEACH.RECRUITMENT BOARD
Reply

நிராகரிக்கப்படுகிறது.
மனுதாரரின் கோரிக்கை சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை வெளியிடப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. ஆதேவா ஓ.மு.எண். 343/ஆ2/2016 நாள் 21.11.2016

நன்றி!
மு.இராஜபாண்டி,
அருப்புக்கோட்டை




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive