NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC:குரூப் - 2 மெயின் தேர்வு வினாத்தாள் முறையில் மீண்டும் மாற்றம்.

குரூப் - 2 மெயின் தேர்வு வினாத்தாள் முறையில் மீண்டும் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது.
15, 30 மதிப்பெண் வினாக்களை சேர்க்க டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது.நகராட்சி ஆணையர் (கிரேடு-2) துணை வணிகவரி அலுவலர், சார்-பதிவாளர் (கிரேடு-2) தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலைஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி நிர்வாக அலுவலர் (கிரேடு-2) உள்ளிட்ட பதவிகளை நேரடி யாக நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு நடத்தப்படுகிறது.
இத்தேர்வு எழுதுவதற்கான குறைந்த பட்ச கல்வித் தகுதி ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். கடந்த 2013-ம் ஆண்டு வரை குரூப்-2 பணிகளுக்கு ஒரே தேர்வு தான் நடத்தப்பட்டு வந்தது. அதுவும் அப்ஜெக்டிவ் முறையில் அமைந்தி ருக்கும். அதன்பிறகு புதிதாக மெயின் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் 50 மதிப்பெண்ணுக்கு அப் ஜெக்டிவ் முறையிலான கேள்விகளும், 250 மதிப்பெண்ணுக்கு விரிவாக பதிலளிக்கும் கேள்விகளும் கேட்கப் பட்டன. இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டுமெயின் தேர்வில் அப்ஜெக் டிவ் முறையிலான கேள்விகள் நீக்கப்பட்டன. அனைத்து கேள்விகளுக் கும் விரிவாக பதிலளிக்கும் புதிய முறை கொண்டுவரப்பட்டது. அதில் 3, 5, 8 மதிப்பெண் கேள்விகள் கேட்கப்பட்டன.
இந்நிலையில், குருப்-2 மெயின் தேர்வு வினாத்தாள் முறையில் டிஎன்பிஎஸ்சி மீண்டும் மாற்றம் செய்திருக்கிறது. அதன்படி, ஏற் கெனவே இடம்பெற்றிருந்த 5 மதிப் பெண் கேள்விகள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன.அதற்குப் பதில் புதிதாக 15 மதிப் பெண் கேள்விகளும், 30 மதிப்பெண் கேள்விகளும் சேர்க்கப்பட்டுள்ளன. வழக்கம்போல் ஒவ்வொரு பகுதி யிலும் கூடுதல் வினாக்கள் கொடுக் கப்பட்டு அவற்றில் தேர்வர்கள் தங்களுக்குப் பிடித்தமான கேள்வி களை தேர்வுசெய்து (Choice) விடையளிக்கலாம்.இந்த புதிய வினாத்தாள் முறை குறித்து சென்னை வெங்கடேஸ்வரா போட்டித்தேர்வுகள் பயிற்சி நிறுவனத் தின்இயக்குநர் பி.அங்கமுத்து கூறும்போது, “3 மதிப்பெண், 5 மதிப்பெண் கேள்விகள் எனில் நன்றாக விடையளித்திருந்தால்அதற்கு முழு மதிப்பெண் பெறும் வாய்ப்பு உண்டு. ஆனால், 15மதிப்பெண், 30 மதிப்பெண் கேள்விகளுக்கு நன்றாக விடையளித்திருந்தாலும் மதிப்பீட் டாளர் எதிர்பார்க்கும் விவரங்கள் முழுமையாக இல்லாவிட்டாலோ, அல்லது பதிலில் அவர் திருப்தி அடையாவிட்டாலோ மதிப்பெண் பெருமளவு குறைக்கப்படலாம். இருப்பினும், நல்லஎழுத்தாற்றலும், விடைகளை நல்ல முறையில் வழங்கும் ஆற்றலும் மிக்க தேர்வர்களுக்கு 15 மதிப்பெண், 30 மதிப்பெண் கேள்விகள் வரப்பிரசாதமாகவே இருக்கும்” என்றார்.குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. நகராட்சி ஆணையர், சார்-பதிவாளர், உதவி பிரிவு அலுவலர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி நிர்வாக அலுவலர்(கிரேடு-2) உள்ளிட்ட பதவிகளில் ஏறத்தாழ 1,700 இடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குரூப்-2 மெயின் தேர்வில் புதிய வினாத்தாள் முறையை பின்பற்ற டிஎன்பிஎஸ்சி முடிவுசெய்துள்ளது.
புதிய பாடத்திட்டம் - குரூப்-2 மெயின் தேர்வுக்கான புதிய பாடத்திட்டம்
*பிரிவு 1: இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் பங்கு மற்றும் அவற்றின் தாக்கங்கள்.
*பிரிவு 2 மற்றும் 3: மத்திய, மாநில அரசுகளின் நிர்வாகம் (தமிழ்நாடு நிர்வாகத்துக்கு அதிக முக்கியத்துவம்), இந்தியா மற்றும் தமிழகத்தின் சமூக, பொருளாதார பிரச்சினைகள்.
*பிரிவு 4 மற்றும் 5: தேசிய அள வில் தற்போதைய பிரச்சினை கள், தமிழக அளவில் தற் போதைய பிரச்சினைகள்.
புதிய வினாத்தாள் முறை
*3 மதிப்பெண் கேள்வி - 35 வினாக்கள் கொடுக்கப்பட்டு அவற்றில் 30 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும் (மதிப்பெண் 90).
*8 மதிப்பெண் கேள்வி - 18 வினாக்கள் கொடுக்கப்பட்டு 15 வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும் (மதிப்பெண் 120).
*15 மதிப்பெண் கேள்வி - 3 கேள்விகள் கொடுக்கப்பட்டு இரண்டுக்கு விடையளிக்க வேண்டும் (மதிப்பெண் 30).
*30 மதிப்பெண் கேள்வி - 4 கேள்விகள் கொடுக்கப்பட்டு இரண்டுக்கு பதிலளிக்க வேண்டும் (மதிப்பெண் 60).




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive