NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பொங்கலுக்கு 11,270 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு!!

        தமிழர்கள் திருநாள் என போற்றப்படும் தைப்பொங்கல் பண்டிகை வருகின்ற ஜனவரி 14-ம் தேதி வருகிறது. பொங்கல்  பண்டிகையையொட்டி தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்னையில் வசிக்கும் மக்கள் செல்லுவது வழக்கமாகும். இதனால், பொங்கல் பண்டிகையையொட்டி பேருந்து, ரயில்களில் கூட்டம் நிரம்பி

வழியும். இதனால், மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில் ஆண்டு தோறும் பண்டிகை காலங்களில் தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கி வருகிறது. அந்த வகையில்  இந்த முறை இயக்கப்படும் பேருந்துகளின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு 11,270 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 29 முன்பதிவு கவுண்டர்கள் அமைக்கப்படும் என்றும், சென்னையிலிருந்து 3 நாட்களுக்கு பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive