NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ரஷிய ராணுவ விமானம் கடலில் விழுந்து 92 பேர் பலி !!

    சிரியாவை நோக்கிச் சென்ற ரஷிய ராணுவ விமானம் கடலில் விழுந்தது. இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த 92 பேரும் உயிரிழந்தனர்.
 
    இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
ரஷியாவின் தென்பகுதி நகரான அட்லரில் இருந்து இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 7.55 மணி
க்கு டியூ-154 ரக ராணுவ விமானம் சிரியாவுக்குப் புறப்பட்டது. இதில் ரஷிய ராணுவ வீரர்கள், ராணுவத்தின் இசைக் குழுவினர், 9 பத்திரிகையாளர்கள் உள்பட 92 பேர் விமானத்தில் பயணித்தனர்.
உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியாவில் அதிபர் பஷார் அல்-அசாதுக்கு ஆதரவாக ரஷிய ராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்காக சிரியாவின் பல்வேறு இடங்களில் ரஷிய ராணுவத்தினர் முகாமிட்டுள்ளனர். புத்தாண்டை முன்னிட்டு சிரியாவில் ரஷிய ராணுவ முகாம்களில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக டியூ-154 விமானத்தில் ஒரு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
விமானம் கிளம்பிய 2 நிமிடத்திலேயே ரேடாரின் பார்வையில் இருந்து மறைந்துவிட்டது. ரஷியாவின் கடற்கரையோர சுற்றுலா நகரான சோச்சியில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் கருங்கடலில் அந்த விமானம் விழுந்துள்ளது. "கடலுக்கு அடியில் 50 முதல் 70 மீட்டர் ஆழத்தில் விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 4 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. விமானத்தில் பயணித்த யாரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை' என்று ரஷிய ராணுவ செய்தித் தொடர்பாளர் இகோர் கோனாசென்கோவ் தெரிவித்துள்ளார்.
விமானம் கடலில் விழுந்து 92 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அரசு விசாரணைக்குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென்று பிரதமர் டிமிட்ரி மெத்வதேவுக்கு ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
அண்மைக் காலமாக மேற்கு சிரியாவில் உள்ள ரஷிய ராணுவ முகாமுக்கு ராணுவ வீரர்களை அழைத்துச் செல்வதற்கும், ஆயுதங்கள் உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் செல்வதற்கும் இந்த விமானம் தொடர்ந்து இயக்கப்பட்டு வந்தது. எனவே, விமானம் விழுந்ததில் சதிச் செயல் ஏதும் இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. சம்பவ இடத்தில் தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.
அந்த விமானம் கடந்த 1983-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இதுவரை 7,000 மணி நேரம் வானில் பறந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இறுதியாக ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டது. அதற்கு முன்பு 2014-ஆம் ஆண்டில் சில பழுதுபார்ப்புப் பணிகளும் அதில் நடைபெற்றுள்ளன. விமானத்தில் பாதுகாப்பு விதிகள் ஏதேனும் மீறப்பட்டுள்ளனவா? என்பது குறித்தும் ராணுவத் தரப்பினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதமர் மோடி இரங்கல்: இந்த சோகச் சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரையில் (டுவிட்டர்) தெரிவித்ததாவது:
ரஷிய ராணுவ விமானம் கடலில் விழுந்து ராணுவ வீரர்கள் உள்பட 92 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இந்த இழப்பால் ரஷியாவுக்கு ஏற்பட்டுள்ள சோகத்தை இந்தியாவும் பகிர்ந்து கொள்கிறது என்று மோடி தெரிவித்துள்ளார்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive