Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

பொங்கல் பண்டிகை : ஏன்? எதற்கு?

                 "பொங்கல் பண்டிகை' என்றதுமேதமிழர்களின் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில்தாண்டவமாடும்.

         அந்த அளவுக்குஅனைத்துத் தரப்பினராலும் ஆனந்தத்தோடுகொண்டாடப்படுவது பொங்கல் திருநாள்.இது தொடர்ச்சியாக நான்கு நாட்கள், நகரம்முதல் கிராமங்கள் வரை பரவலாகக்கொண்டாடப்படுகின்றது. எனினும்கிராமங்களில்தான் இந்தப் பண்டிகையில்கொண்டாட்டங்கள் அதிகம்.
போகி பண்டிகை
"போகி'யோடு தொடங்குகிறது பொங்கல்திருநாள். இந்திரனுக்கு "போகி' என்றொருபெயர் உண்டு. எனவே இந்நாள், "இந்திரவிழா'வாகவும் இருந்திருக்கக்கூடும். மழைபொழிய வைக்கும் கடவுள், வருணன்.அவனுக்கு அரசனாகத் திகழ்ந்துஇயக்குபவன் இந்திரன். வேதத்தில்இந்திரனை பற்றிய துதிகள் பல இடம்பெற்றுள்ளன.
மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்!உயிர்கள் வாழும்! எனவே பண்டையநாட்களில் வருணனின் அதிபதியானஇந்திரனை "போகி'யன்று பூஜிக்கும்வழக்கமிருந்தது. தற்போது, "பழையனகழிதலும், புதியன புகுதலும்' என்றவகையில் போகிப் பண்டிகைகொண்டாடப்படுகிறது.
பொங்கலுக்கு முன்னரே வீட்டைவெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள்.அப்போது தேவையற்ற பழம் பொருட்களைஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்றுஅந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக்கொளுத்துவது வழக்கம். அப்போதுகுழந்தைகள், சிறு பறை கொட்டிக்குதூகலிப்பர்.
ஆனால் இப்போதெல்லாம் போகியன்று"டயர்'களைக் கொளுத்தும் மூடத்தனம்,பரவலாக நடக்கின்றது. இதனால் வளிமண்டலம் மாசு படுவதோடு, மனிதர்களுக்குநோயும் உண்டாகின்றன. ஏற்கெனவேசுவாசக் கோளாறு உள்ளவர்கள், டயர்கள்வெளியிடும் நச்சுப் புகையால் மேலும்பாதிப்புக்குள்ளாவார்கள். என்னதான் காவல்துறையினர் எச்சரித்தாலும், வீட்டுக்கு ஒருகாவலரையா நிறுத்த முடியும்? எனவேநாமே சமுதாயக் கட்டுப்பாடோடும்,அறிவியல் விழிப்புணர்வோடும் இருந்து,நோய்கள் தரும் டயர் கொளுத்தும்வழக்கத்தினை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும்.
பொங்கல் பண்டிகை
ஆடிப் பட்டம் தேடி விதைப்பது தமிழர் மரபு.அவை தை மாதம் பிறப்பதற்கு முன்அறுவடையாகின்றது. அந்தப் புத்தரிசியைமண் பானையில் வைத்து (இதற்காகவேபுதிய பானை வாங்கப்பட்டு, அதில் திருநீறும்குங்குமமும் இட்டு, அப்பானையைதெய்வீகமாகக் கருதுவது வழக்கம்)சர்க்கரைப் பொங்கல் செய்வது மரபு.
பெரும்பாலும் கிராமப்புறங்களில்,வாசலிலே வண்ணக் கோலமிட்டு, அதன்நடுவே பொங்கல் பானையை வைத்து,பானையின் கழுத்தில் மஞ்சள் கிழங்கைஇலையோடு கட்டி, மணம் பரப்பும் பொங்கல்சோறு பொங்கியெழும்போது, "பொங்கலோபொங்கல்' என்று கூறி மகிழ்வார்கள்.இப்படித் திறந்த வெளியில் பொங்கல்வைப்பதால், சூரிய பகவான் அதைநிவேதனமாக ஏற்று மகிழ்கிறார். இதற்காககூடவே கரும்பும் வைத்து, கடவுளுக்குப்படைப்பார்கள்.
நகரங்களில் உள்ளோர்,சமையலறையிலேயே பொங்கல் தயார்செய்துவிடுவார்கள். சந்து,பொந்துகளில்கூட வாகன நெரிசல்வளைத்துக் கட்டும்போது, சமையலறைபொங்கலே நகரங்களில் சாத்தியம்.ஆயினும் "பால்கனி'யிலிருந்தோ,மொட்டை மாடியிலிருந்தோ அந்தப்பொங்கலை சூரியனுக்குப் படைத்துமகிழ்வார்கள்; தூபம், தீபம் காட்டிஆதவனை ஆராதனம் செய்வார்கள்.இங்கும் கட்டாயம் கரும்பு நிவேதனம்,முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
கிராமங்களில் தீபாவளிக்கு புத்தாடைவாங்காது போயினும், பொங்கலுக்குஎப்படியும் புதிய ஆடைகளையேஅணிவார்கள். நகரங்களில் ஏனோதீபாவளியின் இடத்தை பொங்கல் பண்டிகைபிடிக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது.அது சரி, "மாடுகளை மேய்க்க மந்தைவெளிஇங்கு இல்லையே' என்ற பாடல் வரிகள்கூறுவதும் நியாயம்தானே?
எது எப்படியோ... பொங்கல் பண்டிகை தரும்மகிழ்ச்சி, நகரங்களுக்கும் கிராமங்களுக்கும்பொதுவானதே!
மாட்டுப் பொங்கல்
கால்நடைகளே நமது நாட்டில் செல்வத்தின்அடையாளமாக ஒரு காலத்தில் திகழ்ந்தன. "ஆயிரம் பசுவுடைய கோ நாயகர்' என்றபட்டப் பெயர்களெல்லாம் புழக்கத்தில்இருந்தன. "ஏரின் பின்னால்தான் உலகமேசுழல்கின்றது' என்றார் திருவள்ளுவர். அந்தஏர் முனையை முன்னேந்திச் செல்பவைமாடுகளே! இதன் மூலம் மாடுகளே உலகைஉயிர்ப்போடு வைத்துள்ளன எனக் கூறின்மிகையில்லை.
அந்த மாடுகளைக் கடவுளாகவே கருதிவழிபடுவதுதான் மாட்டுப் பொங்கலின்தத்துவம். பசுவின் உடலில் முப்பத்துமுக்கோடி தேவர்களும் உறைவதாகப்பெரியோர்கள் கூறுகின்றனர். எனவேபசுவை வணங்குவதன் மூலம், அனைத்துதேவர்களின் ஆசிகளும் நமக்குக்கிடைக்கின்றன.
மாட்டுப் பொங்கலன்று பசுக்களுக்கு மஞ்சள்பூசி, திருநீறிட்டு, குங்குமம் வைத்து, மாலைபோட்டு வணங்குவர். அதன் பசிக்குத்தேவையான உணவையும் படைப்பர்.
காளைகளுக்கு கொம்புகளில் வர்ணம் பூசி,காலில் சலங்கை கட்டி, "வீர நடை' நடக்கவைப்பர். பல வீடுகளில் அன்று காளைமாடுகளுக்கு "அங்க வஸ்திரம்' போர்த்தி,மரியாதை செய்வார்கள். ஜல்லிக்கட்டுஎன்ற வீர விளையாட்டின் நாயகர்களும்காளைகளே! ஆனால் அக்காளைகளுக்குசெயற்கையான முறைகளில்வெறியூட்டுவது தவறு. தக்கமருத்துவர்களின் ஆலோசனைகளைக்கேட்டுப் பெற்று, அதன் வீரத்தை வளர்ப்பதேவிவேகமான செயலாகும்.
திருவள்ளுவர் தினம்
மாட்டுப் பொங்கலன்று திருவள்ளுவர்தினமும் வருகின்றது. நாத்திகர்களாலும்மறுக்க முடியாத தெய்வப் புலவர்திருவள்ளுவர். கடவுள் வாழ்த்தோடுதிருக்குறளைத் தொடங்கும் வள்ளுவப்பெருந்தகை, காதலுடன் அவ்வரிய நூலைநிறைவு செய்கின்றார்.
திருக்குறளில் சொல்லப்படாத விஷயமேஇல்லை.
"உண்டது செரித்ததை உணர்ந்துஉண்போர்க்கு மருந்தே தேவையில்லை'என்று அன்றே சொன்ன மருத்துவ வல்லுநர்திருவள்ளுவர். நீதி, நேர்மை, உண்மை,துறவு, அரச நீதி, காதல் என்று அவர் பாடாதவிஷயமே இல்லை. திருவள்ளுவர்தினத்தன்று வள்ளுவர் கூறிய அறநெறிப்பாடல்களை நாமும் ஓதி, இளையசமுதாயத்தினருக்கும் அவற்றின்பொருட்களை உணர்வித்தலேஉண்மையான "வள்ளுவ பூஜை'யாகும்.இந்நன்னெறியை தமிழர்கள் கட்டாயம்பின்பற்ற வேண்டும்.
காணும்பொங்கல்
பெண்கள் தங்கள் சகோதரர்களின்நலனுக்காகச் செய்வது "கனு' பொங்கல்.அன்று காலை நீராடி, வெறும் வயிற்றுடன்,வெட்ட வெளியில் சூரியக் கோலமிட்டு,அதில் பொங்கல், கரும்பு போன்றவற்றைவைத்து, ஆதவனுக்கு அர்ப்பணிப்பார்கள்.
"காணும் பொங்கலும்' இந்த நன்னாளே!அன்று புத்தாடை அணிந்துசுற்றத்தாரையும், நண்பர்களையும் பார்த்துஅளாவி மகிழ்வது வழக்கம். சிலர் இன்பச்சுற்றுலாவும் சென்று களிப்பர். ஒருகாலத்தில் எல்லாச் சந்தர்பங்களிலுமேசொந்தமும், நட்பும் அடிக்கடி சந்தித்துமகிழும் பண்பாடிருந்தது. இன்றைய"சீரியல்' உலகில், வீட்டுக்கு வரும்சிநேகங்களைப் பார்த்துச் சிரிப்பதுகூடஅரிதாகிவிட்டது. இந்த அவல நிலையைமாற்ற இந்தக் காணும் பொங்கல் நாளில்சபதமேற்போம்!
வாழ்கின்ற ஒவ்வொரு நாளுமே திருநாளாகமலரட்டும்! ஜாதி, மத, இன, மொழிவேறுபாடுகள், "சூரியனை' கண்ட பனிபோலவிலகட்டும்! அதற்கு அந்த ஆதவனேநல்வழி காட்டட்டும்! வாழிய செந்தமிழ்!வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திருநாடு!

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Total Pageviews

Most Reading