Printfriendly

www.Padasalai.Net

Padasalai

Menu (Please wait for Full Loading)

மழை விடுமுறை விழித்துக்கொண்ட கல்வித்துறை...!!

        புயல் காரணமாக மழை பெய்யப்போகிறது என்ற முன்னெச்சரிக்கையே விவசாயிகள், பொதுமக்கள் என்று பல்வேறு தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 
 
      இன்னொரு புறம் பள்ளிகளுக்கு டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது மாணவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.வழக்கமாக கனமழை பெய்யும் போதுதான், மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்லமுடியாது என்பதைக் கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். கடந்த ஆண்டு சென்னை மழையின்போது கூட கனமழை பெய்த போதும் விடுமுறை அறிவிப்பதற்கு தாமதம் ஏற்பட்டது என்று சர்ச்சை கிளம்பியது. யார் விடுமுறை அறிவிப்பது என்பதிலும் குழப்பம் நிலவியது.

மாவட்ட ஆட்சியரா அல்லது தலைமைச் செயலகத்தில் கல்வித்துறையா என்பதில் சர்ச்சை இருந்தது.
 ஆனால், இப்போது நாடா புயல் 2-ம் தேதி காலை கரையைக் கடக்கும் என்று அறிவிப்பு வெளியாகி சில மணி நேரங்களில் கல்வித்துறை சார்பில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை மாவட்டங்கள் மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு என முன்கூட்டியே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.
 இந்த முன்னெச்சரிக்கை அறிவிப்பு பெற்றோர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இன்னொருபுறம் "இவனுகளை வீட்டில் வைத்துக்கொண்டு எப்படி சமாளிப்பது" என்று பெற்றோர் புலம்புவதையும் கேட்கமுடிகிறது.
 2015-ம் ஆண்டு மழை, வெள்ளத்தின் போது நவம்பர் மாத த்தில் தீபாவளி விடுமுறைக்குப் பின்னர் மழை காரணமாக பள்ளிகள் செயல்படவில்லை. டிசம்பர் மாதத்திலும் பல நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அரையாண்டு தேர்வுகளும் நடைபெறவில்லை.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Blogger news

Blogroll

Total Pageviews

Most Reading